குக் வித் கேமாளி நிகழ்ச்சி மூலமாக பிரபலமடைந்தவர் செஃப் வெங்கடேஷ் பட்.  இவர் அவ்வபோது நேர்காணல்களில் பங்கேற்று பல சுவாரஸ்ய தகவல்களையும் கொடுப்பார். அந்த வகையில் இவர் சமீபத்தில்  மறைந்த இங்கிலாந்து இளவரசி எலிசபெத் , இந்தியா வந்திருந்த சமயத்தில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார்.







வெங்கடேஷ் பட் பகிர்ந்ததாவது :


“ எலிசபெத் இந்தியா வந்திருந்தாங்க. அப்போ கலைஞருடைய ஆட்சி . மருதநாயகம்  படம் உள்ளிட்ட பல விஷயங்களுக்காக அவர்களது வருகை இருந்துச்சு.  அவங்க தாஜ் ஹோட்டல்லதான் தங்கியிருந்தாங்க. அதற்காக இரண்டு ஃப்ளோரை பிளாக் பண்ணிருந்தாங்க. அவங்களுக்கு கலைஞர் ஒரு விருந்து ஏற்பாடு செய்திருந்தார். அதை நான் என்னுடைய ஜூரி செஃப் , எக்ஸிக்யூட்டிவ் ஜூரி செஃப் நாங்கதான் அதற்கு பொறுப்பாக இருக்கோம். அதற்கான வேலைகளை செய்துட்டு இருந்தோம். அப்போ என்னுடைய எக்ஸிக்யூட்டிவ் செஃப் நடராஜனுக்கு ஒரு அழைப்பு வந்துச்சு , அப்போ காலையில ஆறு மணி இருக்கும் . அவங்க அம்மா இறந்துட்டாங்க தஞ்சாவூர்லனு. இரவு 8 மணிக்குதான் குயினுக்கான விருந்து, 10.30 மணி ஆகிடும் முடிய. அந்த சமயத்துல செஃப் நடராஜன் சொல்லுறாரு , நீங்க காரியத்தை தம்பிகளை வச்சு பாருங்க, நான் வர முடியாதுனு சொல்லிட்டாரு. குயின் செக் அவுட் ஆகி மூன்று நாட்களுக்கு பிறகுதான் அம்மாவுடைய இறப்பிற்கே போனாரு “ என்றார்.




இங்கிலாந்து  மகாராணியான எலிசபெத் கடந்த அக்டோபர் மாதம் முதல் உடல்நலப்பிரச்சினைகளால்  அவதிப்பட்டு வந்த நிலையில் சமீபத்தில் உயிரிழந்தார். அப்போது அவருக்கு வயது 96. எலிசபெத் தன்னுடைய வாழ்நாளில் 70 ஆண்டுகாலம் இளவரசியாக பதிவி வகித்திருக்கிறார். உலகின் நீண்ட காலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் இவர். கடந்த 1926ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் தேதி ஜார்ஜ் 6 ஆம் தேதி மன்னருக்கு பிறந்த எலிசபெத் மகாராணி தன் தந்தை இறப்புக்குப் பிறகு 1953ஆம் ஆண்டு ராணியாக முடிசூடிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண