சிம்புவின் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ல் ரிலீஸ் ஆகிறது என படக்குழு அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  


இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்துள்ள திரைப்படம், வெந்து தணிந்தது காடு. இப்படம் செப்டம்பர் 15ல் ரிலீஸ் செய்யப்படுவதாக படக்குழு அறிவித்துள்ளது.  படக்குழு சார்பாக படத்தின் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் தனது டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் தேதியினை வெளியிட்டார். நடிகர் சிம்புவின் தந்தை இயக்குநர் டி.ராஜேந்திரன் அவர்களுக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவால் படத்தின் டப்பிங்கிலிருந்து விலகி, தந்து தந்தையின் உயர் சிகிச்சைக்காக வெளிநாடு சென்றிருந்தார் சிம்பு. இதனால் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபட்டது. இந்நிலையில் படக்குழு படத்தின் ரிலீஸ் தேதியினை வெளியிட்டிருப்பது சிம்புவின் ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியினை ஏற்படுத்தியிருக்கிறது.  இந்த அறிவிப்பை மிகவும் வித்தியாசமான முறையில் படக்குழு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு வீடியோ அனைவரிடத்திலும் படத்தின் மீது ஆவலை தூண்டும் விதமாக உள்ளது.  இந்தப் படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ளார்.


 






இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்துள்ளார். 


 



இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன், நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் கூட்டணியில் உருவாகியிருக்கும் மூன்றாவது திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இதற்கு முன்னர் விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா ஆகிய திரைப்படங்கள் வெளியாகி இருந்தது. இந்த இரண்டு படங்களும் சூப்பர் டூப்பட் ஹிட் அடித்த படங்கள். அதன் பாடல்களும் ஹிட், இன்றைக்கும் பலரது ரிங் டோனாக இருக்கிறது. இக்கூட்டணியில் உருவாகியிருக்கும் வெந்து தணிந்தது காடு திரைப்படம் செப்டம்பர் 15ல் உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சித்தி இத்னானி, ராதிகா, சித்திக், நீரஜ் மாதவ், ஏஞ்சலினா ஆப்ரஹம் முதலானோர் முக்கிய கதாப்பாத்திரத்தில்  நடித்துள்ளனர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண