வெந்து தணிந்தது காடு படத்தில் இடம் பெற்ற “மல்லிப்பூ பாடல்” 100 மில்லியன் பார்வைகளை பெற்றதாக படக்குழு அறிவித்துள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


3வது முறையாக கூட்டணி


விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களைத் தொடர்ந்து சிலம்பரசன் - கௌதம் வாசுதேவ் மேனன் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி 3வது முறையாக இணைந்த படம் “ வெந்து தணிந்தது காடு”. ஐசரி கணேஷின் வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்தின் மூலம் நடிகை சித்தி இட்னானி  தமிழில் அறிமுகமானார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15 ஆம் தேதியான தியேட்டர்களில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் பெற்றது. 


இரண்டு பாகங்களாக உருவாகியிருந்த வெந்து தணிந்தது காடு படத்தின் திரையரங்க விநியோக உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியிருந்தது. அப்பாவி இளைஞன், ரவுடி, கேங்ஸ்டர் என 3 பரிணாமங்களில் சிம்பு இப்படத்தில் கலக்கியிருந்தார். பாடல்களும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது. 


மல்லிப்பூ பாடல்


வெந்து தணிந்தது காடு படத்தில் “மல்லிப்பூ” பாடம் இடம் பெற்றிருந்தது. தாமரை எழுதிய அப்பாடல் தலைவனின் பிரிவை கண்டு தலைவி ஏக்கத்தில் பாடுவது போல இந்த பாடல் எழுதப்பட்டிருந்தது. இதனை மதுஸ்ரீ பாடியிருந்தார். பட்டித்தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய இப்பாடல் கடந்தாண்டின் ஹிட் பாடல்களில் ஒன்றாக அமைந்தது. இன்றளவும் லூப் மோடில் கேட்டு ரசித்து கொண்டிருக்கும் மல்லிப்பூ பாடல் 50 ஆயிரத்திற்கும் அதிகமான இணையவாசிகள் ரீல்ஸ் செய்து பதிவிட்டனர். இதற்கு நடிகர் சிம்பு நன்றி தெரிவித்திருந்தார். 


இந்நிலையில் மல்லிப்பூ பாடல் 100 மில்லியன் பார்வைகளை எட்டியுள்ளது. இதனை சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் பதிவிட்டு வருகின்றனர்.