விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க சீமான் முடிவு எடுத்துள்ளார். இந்த வரலாற்று திரைப்படத்தை தேசிய விருது பெற்ற இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார் எனும் அதிகாரபூர்வமான தகவலை சீமான் தனது ட்விட்டர் பக்கம் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.
சீமான் லேட்டஸ்ட் ட்வீட் :
தமிழர்களின் வரலாற்றை எடுத்துரைக்கும் அருள்மொழி வர்மனின் சோழ சாம்ராஜ்யம் குறித்த உண்மையான கதையை இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு படமாக்கியதை போலவே இந்த நூற்றாண்டின் ஈடு இணையில்லா விடுதலைப் போராட்ட வீரர் தமிழர் தலைவர் அண்ணன் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை ஒரு படமாக சீமான் தயாரிக்க, இயக்குனர் வெற்றிமாறன் இப்படத்தை இயக்க உள்ளார் எனும் தகவலை சீமான் தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரிவித்துள்ளார்.
பிரபாகரனின் சரித்திரம் படமாகிறது:
அண்ணல் அம்பேத்கரின் புரட்சிகரமான வார்த்தைகள் "வரலாற்றில் புறக்கணிக்கப்பட்ட சாதி மக்கள் அவர்களின் வரலாற்றை எழுதுவார்கள். அது போல ஒரு நாள் நம் வரலாற்றை எழுதுவோம். அன்று நாம் தமிழர்கள் யார் என்பதை உலகம் அறியும்" எனும் வார்த்தைகளுக்கு இணங்க வேலுப்பிள்ளை பிரபாகரனின் சரித்திரத்தை படமாக்க உள்ளர் சீமான்.
ஆர்வம் காட்டும் திரைதுறையினர் :
இந்த அறிவிப்பால் மிகவும் உற்சாகம் அடைந்துள்ளனர் திரையுலகத்தினர். மேலும் இப்படத்தில் நடிக்க இருக்கும் கதாபாத்திரங்கள் குறித்த விவரம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர். இந்த விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படம் வெளியாக சிறிது காலம் எடுத்துக் கொள்ளலாம். ஏனென்றால் தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிக்கும் "விடுதலை" படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் மிகவும் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர் வெற்றிமாறன். இதனை தொடர்ந்து நடிகர் சூர்யாவை வைத்து "வாடிவாசல்" திரைப்படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார் என்பதால் இப்படம் தொடங்க சிறிது காலம் ஆகலாம் என கூறப்படுகிறது.