ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்திருக்கும் படம் வீரன். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகியுள்ள நிலையில் இன்று மாலை ஸ்பெஷல் அப்டேட் ஒன்றை வெளியிட இருக்கிறது படக்குழு. டோவினோ தாமஸ் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மின்னல் முரளி திரைப்படத்தின் போஸ்டரை இந்த தகவலை படக்குழு வெளியிட்டது பரபரப்பை கிளப்பியுள்ளது. ஒருவேளை இது புதிய ஒரு சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ்க்கான தொடக்கமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது அது உண்மையாக இருப்பதற்கான வாய்ப்புகளும் அதிகமாக இருக்கலாம்.


மின்னர் முரளி


பாசில் ஜோசஃப் இயக்கத்தில் டொவினோ தாமஸ்  நடிப்பில்  எடுக்கப்பட்டப் படம் மின்னல் முரளி. கடந்த 2021 ஆம் அண்டு நெட்ப்ளிக்ஸில் வெளியானது. மின்னல் முரளி திரைப்படம் கடந்த 2021-ஆம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியானது. டோவினோ தாமஸ் மற்றும் குரு சோமசுந்தரம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். பெரும்பாலும் நாம் ஹாலிவுட் சூப்பர் ஹீரோக்களையே பார்த்துவந்த சூழலில் நம்ம ஊரில்  இருக்கும் ஒருவர் சூப்பர் ஹீரோவாக உருவெடுத்தால் எப்படிப்பட்ட ஒரு ஹீரோவாக இருக்கும் என்பதை மிக அநாயசமாக செய்துகாட்டிய படம். ஒரு ஊரில் இருக்கும் இரண்டு நபர்களை மின்னல் தாக்குகிறது. இதனால் அவர்களுக்கு சூப்பர் பவர்ஸ் கிடைக்கின்றன. அவரவர்களின் சூழ்நிலைகள், தேவைகளுக்கு ஏற்ப தங்களது சக்திகளை எப்படி பயன்படுத்துகிறார்கள் என்பதே மின்னல் முரளியின் கதை.  


ஹீரோவாக டொவினோ தாமஸ் மாறுகிறார், வில்லனாக குரு சோமசுந்தரம் மாறுகிறார். கதையாக நாம் ஏற்கனவே பார்த்த கதைதான் என்றாலும் கதாபாத்திரங்களின் வாழ்க்கை அவர்களுக்கான காதல் என சின்ன சின்ன நுட்பங்களை கதையில் சேர்த்து மிக சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட படம்.


இரண்டாம் பாகம்


 மின்னல் முரளியின் முதல் பாகத்தைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் பாகத்தை மிகவும் ஆர்வமாக எதிர்பார்த்து வந்தனர். ரசிகர்கள். விரைவில் மின்னர் முரளியின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. முதல் பாகத்தில் வில்லனாக நடித்து குரு சோமசுந்தரம் தான் இந்த பாகத்திலும்  நடிக்கப்போகிறாரா? என்கிற கேள்வி அனைவர் மனதிலும் இருக்கத்தான் செய்கிறது.


வீரன்


தற்போது ஆதி நடித்திருக்கும் வீரன் திரைப்படமும் கிட்டத்தட்ட இதே மாதிரியான கதையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஒரு கிராமத்தில் இருக்கும் சூப்பர் ஹீரோவைப்போலத்தான் ஆதி காட்சி தருகிறார். படக்குழு சார்பில் வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு பல்வேறு யோசனைகளை கிளப்பிவிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் சினிமேடிக் யுனிவர்ஸைத் தொடர்ந்து ஹிந்தியில் ப்ரகாஷ் வர்மா சினிமேடிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்க இருக்கிறார். இந்நிலையில் புதிதாக ஒரு தமிழ் மற்றும் மலையாளப் படங்களுக்கு இடையில் சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்க திட்டமிட்டுள்ளார்களா?