பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் வருண் தவான் லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. 


நீத்தா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் திறப்பு விழா சமீபத்தில் மிகவும் பிரமாண்டமாக மும்பையில் நடைபெற்றது. இந்த விழாவில்  பாலிவுட் பிரபலங்கள் மட்டுமின்றி டாம் ஹாலண்ட், ஜெண்டயா, கார்லி க்ளோஸ் , பெனிலோப் குரூஸ், எம்மா சேம்பர்லைன் என பஹாலிவுட் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் அமெரிக்கன் சூப்பர் மாடல் கிகி ஹதித்தும் கலந்து கொண்டார். இந்த விழாவில் பல இசை நிகழ்ச்சிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. அந்த வகையில் 2ம் நாள் விருந்தினர்களுக்காக நடைபெற்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்ற வருண் தவான் திடீரென கிகி ஹடிட்டை மேடைக்கு பாலிவுட் ஸ்டைலில் அழைத்தார். கிகியும் மேடையில் ஏற்றி செல்லும்போது அவரது கையை பிடித்து தூக்கி சுழற்றி கன்னத்தில் ஒரு முத்தமும் கொடுத்ததை சற்றும் எதிர்பார்க்காத கிகி அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியாமல் மிரண்டு போனார். 



சர்ச்சையை ஏற்படுத்திய வருண் தவான் :


வருணின் இந்த செயல் சோசியல் மீடியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிகழ்வு குறித்து பலதரப்பட்ட கருத்துக்களும் இணையத்தில் முன்வைக்கப்பட்டு ஒரு பேசுபொருளாக மாறியது. இந்த விமர்சனங்களை எல்லாம் சற்றும் பொருட்படுத்தாத வருண் தவான் தற்போது அந்த த்ரோ பேக் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கிகிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 


வருண் தவான் லேட்டஸ்ட் போஸ்ட் :


அமெரிக்க மாடல் கிகி ஹடிட், ஏப்ரல் 23-ம் தேதியன்று தனது 28-வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் வருண் தவான். NMACC நிகழ்வில் கிகியைத் வருண் தூக்கியிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள், கிகி ஹடிட்! ஜொலித்துக்கொண்டே இருங்கள். சிரித்துக்கொண்டே இருங்கள்..." என்ற ஒரு போஸ்டை பகிர்ந்துள்ளார் வருண் தவான். அவரின் இந்த போஸ்ட் பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் ஒரு சில ரசிகர்கள் லைக்ஸ்களையும் கொடுத்து வருகிறார்கள்.