விஜய் - அஜித்:
தமிழ் சினிமாவில் விஜய் - அஜித் இருவரின் ஆதர்ச நாயகியாகவும் விளங்கியவர் த்ரிஷா. தன் தமிழ் திரையுலக வாழ்வில் விஜய்யுடன் கில்லி, குருவி, திருப்பாச்சி, ஆதி ஆகிய படங்களிலும், அஜித் உடன் ஜி, கிரீடம், என்னை அறிந்தால், மங்காத்தா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் த்ரிஷா.
விஜய் - அஜித் என இருவருடனும் தலா 4 படங்களிலும் ஜோடி சேர்ந்துள்ளார் த்ரிஷா. கடந்த சில ஆண்டுகளாக த்ரிஷா விஜய் - அஜித் இருவருடனும் நடிக்காமல் இருந்து வந்தாலும், இரு தரப்பினரும் தல - தளபதிக்கு ஏற்ற ஜோடி த்ரிஷா தான் என மாறி மாறி கொண்டாடியே வருகின்றனர்.
வாரிசா..? துணிவா..?
இந்த ஆண்டு பொங்கலுக்கு அஜித் - விஜய் இருவரது படங்களும் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மோத உள்ள சூழலில் இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், முன்னதாக தனியார் சேனல் ஒன்றுக்குப் பேட்டியளித்த த்ரிஷாவிடம் பொங்கலுக்கு வாரிசா? துணிவா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த த்ரிஷா, இதற்கு கண்டிப்பா பதிலளிக்க முடியாது. நான் பொய் சொல்ல விரும்பவில்லை. நீங்கள் காண்ட்ரவர்சி ஆக்கி விடுவீர்கள். ஆனால் நான் கண்டிப்பாக இரண்டு படங்களையும் பார்ப்பேன். அதுவும் தியேட்டர்களுக்குச் சென்று பார்ப்பேன். எனக்கு தியேட்டருக்கு சென்று படம் பார்க்க ரொம்பப் பிடிக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக த்ரிஷா தமிழ் சினிமாவில் தான் 20 ஆண்டுகள் நிறைவு செய்ததை கோலிவுட், டோலிவுட் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.