இன்று வெளியாகுமா வாரிசு ட்ரெய்லர் ?




வரும் பொங்கல் பண்டிகையையொட்டி விஜய் நடிக்கும் வாரிசு படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது; ஆனால், இன்று வரை படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை. கடந்த வருடம் டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. இதனையடுத்து வாரிசு படத்தின் ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் பரவிவருகிறது.


மில்லியன் கணக்கில் பார்வைகளை பெற்ற துணிவு 



துணிவு ட்ரெய்லரில் நீண்ட நாட்களுக்கு பிறகு நகைச்சுவை கலந்த வில்லத்தனமான நாயகனாக அஜித் தோன்றியிருப்பது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சிலர் துணிவு ட்ரெயிலரை, விஜய் நடித்த பீஸ்ட் படத்தை போல உள்ளதாக விமர்சனமும் செய்து வருகின்றனர். தற்போது இந்த ட்ரெய்லர் 35 மில்லியன் பார்வைகளை பெற்றுள்ளது.


விக்கியின் வரிசையான இன்ஸ்டா பதிவு






இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கடந்த 2022ம் ஆண்டிற்கு நன்றி தெரிவித்து நீண்ட பதிவை வெளியிட்டார். நயன்தாரவை மணந்ததற்கும், இரு குழந்தைகளுக்கு தகப்பன் ஆனதற்கும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்கும், கனெக்ட் படத்திற்கும், செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியை இயக்கியதற்கும் ஏகே 62 படத்தை இயக்கபோவதற்கும் அவர் தனது நன்றி உணர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.


7ஜி ரெயின்போ காலணி -2 




7ஜி ரெயின்போ காலணியின் தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னமின் மகன் ரவிகிருஷ்ணா,இப்படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இவர், சமீப காலங்களில் எந்த மொழி படங்களிலும் நடிப்பதில்லை. இந்நிலையில், தயாரிப்பாளர் ஏ எம் ரத்தினம் 7ஜி ரெயின்போ காலணி படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து அப்படத்தின் இயக்குனர் செல்வராகவனிடமும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவித்துள்ளார்.


லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக்






கோமாளி இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், லவ் டுடே படத்தில்நடித்து கதாநாயகனாக அறிமுகமானார். இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வசூலை அள்ளியது. அதன் பின், தெலுங்கிலும் இப்படம் வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. தற்போது, இந்த படம், ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தியில் இப்படத்தை போனி கபூர் தயாரிக்க உள்ளார்; அதில் வருண் தவான் கதாநாயகனாக நடிக்க, வருணின் தந்தை டேவிட் தவான் அப்படத்தை இயக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது; 


விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்: 


மார்வெல் திரையுலகின் அவெஞ்சர்ஸ் திரைப்படத்தில் ஹாவ்க்-ஐ கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம், உலகம் முழுவதும் பிரபலாமானவர் ஜெர்மி ரன்னர்.  ரோஸ்-ஸ்கி தஹோ மவுண்ட் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு ஜெர்மி ரென்னர் காரில் சென்றுள்ளார்;




அப்போது, கடும் குளிர் காற்றுடன் பனிப்பொழிவு கொட்டியதால், ரென்னரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் மோதி விபத்துக்குள்ளானது.  அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது;