தொடங்கியது வாரிசு டிக்கெட் புக்கிங்






விஜய் நடிப்பில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகபோகும் வாரிசு படத்தின் டிக்கெட் புக்கிங் லண்டனில் அடுத்த வாரத்தில் துவங்கவுள்ளது. இதுவரை, ஒரு மாதத்திற்கு முன்பே எந்தவொரு  படத்திற்காகவும் டிக்கெட் விற்பனை துவங்கியது இல்லை. அதுவும், வாரிசு படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அதிகார்பூர்வ தகவல் எதுவும் வராத நிலையில், லண்டனில் மட்டும் டிக்கெட் புக்கிங் குறித்த தகவல் வெளியாகிவுள்ளது.


நாளை வெளியாகும் துணிவு படத்தின் முதல் சிங்கிள் 






2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் முதல் பாடலாக சில்லா சில்லா வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக சில தினங்களுக்கு முன் படக்குழு அறிவித்தது.


இசையமைப்பாளர் அனிருத் பாடியிருந்த  இப்பாடலை ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்த நிலையில், ரிலீஸிற்கு முன்பாகவே, இதன் 10 விநாடி பாடல் வரிகள் இணையத்தில் வெளியாகியது. இதனையடுத்து ரசிகர்கள் இந்த வீடியோக்களை பகிர வேண்டாம் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எப்படி சில்லா சில்லா பாடல் இணையத்தில் கசிந்தது என்பது குறித்து படக்குழு விசாரணையில் களமிறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 



பாபா ரீ-ரிலீஸ் தேதி உறுதியானது 







வழக்கமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படங்களுக்கு இருக்கும் அமோகமான வரவேற்பு  பாபா படத்திற்கும் இருந்தது. இருப்பினும் எதிர்பார்த்த அளவு தோல்வியை சந்தித்தது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இப்படம் புது பொலிவுடன் நவீன தொழில்நுட்பத்திற்கேற்ப கலர் கிரேடிங் செய்யப்பட்டு டிஜிட்டலில் ஒவ்வொரு பிரேமும் மேம்படுத்தப்பட்டு வெளியாகவுள்ளது எனும் தகவல் வெளியானது. முழுவீச்சில் நடைபெற்று வந்த பாபா ரீ ரிலீஸ் தற்போது திரையில் வர தயாராகிவிட்டது. இது வரும் டிசம்பர் 10 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியாக உள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.



ஹனிமூன் சென்ற ஹன்சிகா 






ஹன்சிகா, அவரது நண்பரான சோஹைல் கதுரியாவை மணந்து கொள்வதாக இன்ஸ்டாவில் பதிவிட்டார். அதைதொடர்ந்து கடந்த 2 ஆம் தேதி சூஃபி இசைக்கச்சேரியுடன் தொடங்கிய திருமண சடங்குகள் தொடங்கின. 3 ஆம் தேதி நலங்கு வைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து டிசம்பர் 4 -2022 இரவு  ஜெய்ப்பூரில் உள்ள 450 வருட பழமையான முண்டோடா கோட்டை மற்றும் அரண்மனையில் இருவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில் மும்பை விமான நிலையத்தில்   ஹன்சிகா, சோஹைல் கதுரியா ஜோடியின் புதிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.  ஹனிமூனைப்பற்றி நடிகை ஹன்சிகாவிடம் கேட்ட போது அவர் வெட்கப்பட்டு சிரித்தார்.
இந்த க்யூட் தம்பதியின் புகைப்படங்கள் தற்போது சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு காட்டு தீ போல பரவி வருகிறது.


கம்-பேக் கொடுக்கும் மம்மி நாயகன்






1990லிருந்து 2000 வரை பல ப்ளாக் பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த பிரெண்டன்,   ஹாலிவுட்டின் வெளிநாட்டு ஊடக சங்கத்தின் (Hollywood Foreign Press Association) தலைவராக இருந்த ஃபிலிப் பர்க் இவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டதாக கூறினார். இதையடுத்து மனைவிக்கும் இவருக்கும் விவாகரத்து நடந்தது. இது மட்டுமன்றி, மம்மி படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது பல விபத்துகளுக்கு உள்ளானார், பிரெண்டன். இதனால் இவரது உடலின் பல பகுதிகளில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டது.


இப்படி பல இன்னல்கலைக் கடந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது தி வேல் (The Whale) என்ற சைக்காலாஜிக்கல் த்ரில்லர் படம் மூலம் கம்-பேக் கொடுத்துள்ளார். இப்படம் நாளை வெளியாகிறது. இந்த படத்தின் ரிலீஸையொட்டி அவர்களின் ரசிகர்கள் காத்து கொண்டு இருக்கின்றனர்.