Varisu Thunivu Release LIVE: திரையரங்குகளில் வாரிசு, துணிவு கூடுதல் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
Varisu Thunivu Release LIVE Updates: வாரிசு, துணிவு படங்கள் வெளியாவதையொட்டி, படம் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் இங்கு காணலாம்.
நடிகர் அஜித்தின் திரையுலக வாழ்வில் அமெரிக்காவில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய படமாக துணிவு உருவெடுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திரைப்பட விநியோகஸ்தர்களின் கோரிக்கையை ஏற்று வாரிசு - துணிவு படங்களின் கூடுதல் காட்சிகளுக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 12, 13, 18 ஆகிய தேதிகளில் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,
வாரிசு படம் பார்த்து ரசித்த டான் பட இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, “விண்டேஜ் விஜய்யை பார்த்ததில் ரொம்ப மகிழ்ச்சி. இது தான் உண்மையான தீ தளபதி” எனப் பதிவிட்டுள்ளார்.
மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் மகேந்திரன், வாரிசு படம் பார்த்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
“விஜய் அண்ணா உங்க எனர்ஜி, திரை ஆளுமை, நடிப்பு எல்லாமே டாப் க்ளாஸ். நீங்களும் ஜெயசுதா மேடமும் வரும் இடங்கள் எல்லாம் ஷோபா அம்மாவ பாத்த மாதிரி இருந்துச்சு” என நெகிழ்ச்சியுடன் மகேந்திரன் ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் திரையரங்குக்கு சென்று ரசிகர்களுடன் ரசிகராக துணிவு படம் பார்த்து ரசித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
என் மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி விஜய் சார் என்று வாரிசு படத்தின் இயக்குநர் வம்சி தெரிவித்துள்ளார்.
பொங்கல் ரிலீஸாக இன்று வெளியான வாரிசு - துணிவு திரைப்படங்களின் FDFS பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் நிலவரப்படி வாரிசை ஓரங்கட்டி விட்டு 2 கோடி அதிகமாக வசூலித்து முன்னிலை வகிக்கிறது அஜித்தின் துணிவு.
துணிவு படம் இதுவரை 12 கோடி வசூல் செய்துள்ளதாகவும் அதே சமயம் வாரிசு 10 கோடி வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாரிசு பட ப்ரீமியர் ஷோவில் கலந்துகொண்ட ராஷ்மிகா ‘வா தலைவா’ பாடலுக்கு ‘வைப்’ஆன வீடியோக்களும் போட்டோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
துணிவு படத்தில் ஜான் கொக்கெனின் கதாபாத்திரம் பாராட்டுகளைப் பெற்று வரும் நிலையில் நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்து ஜான் கொக்கென் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வாரிசு FDFS பார்த்து மகிழ்ந்து தன் இன்ஸ்டா ஸ்டோரியில் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். ”தாய்லாந்து பீச் போனாலும் பொங்கல்னா சென்னை வந்து தான் ஆகணும்” எனக் குறிப்பிட்டு கீர்த்தி சுரேஷ் ஃபோட்டோ பகிர்ந்துள்ளார்.
துணிவு படம் தெலுங்கில் தெகிம்பு எனும் பெயரில் சங்கராந்தி ஸ்பெஷல் ரிலீசாக இன்று வெளியான நிலையில், டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பாசிடிவ் விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
ரசிகர்கள் நெடுநாட்களாக எதிர்பார்த்துவந்த வாரிசு திரைப்படம் இன்று வெளியானது. இதனை, தளபதி 67 படத்தை இயக்கிவரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கண்டுகளித்தார். படம் குறித்து அவரிடம் கேள்வியெழுப்பியபோது, “படம் சிறப்பாக வந்துள்ளது. எனக்கு பிடித்திருக்கிறது. ரசிகர்களும் கொண்டாட்டமாக படத்தை பார்த்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.
வாரிசு படத்தில் நடித்த குஷ்புவுக்கு நன்றி தெரிவித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய நிலையில், குஷ்புவின் காட்சிகள் படத்தில் இடம்பெறாததாகக் கூறப்படுகிறது. இதனால் சமூகவலைதளங்களில் குஷ்பு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
வாரிசு படத்தில் நடித்த குஷ்புவுக்கு நன்றி தெரிவித்து இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய நிலையில், குஷ்புவின் காட்சிகள் படத்தில் இடம்பெறாததாகக் கூறப்படுகிறது. இதனால் சமூகவலைதளங்களில் குஷ்பு ரசிகர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, ரோகிணி திரையரங்குக்கு துணிவு படம் பார்க்க வந்த ரசிகர், லாரி மீது ஏறி நின்று நடனமாடியபோது விழுந்ததில் முதுகுத் தண்டில் பலத்த அடி பட்டு உயிரிழந்தார்.
வாரிசு படத்தை த்ரிஷா திரையரங்கில் கண்டுகளித்து ஆர்ப்பரிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகிவருகிறது. தளபதி 67 படத்தில் த்ரிஷா ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், த்ரிஷாவின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரியில் அண்ணாசாலை, மறைமலை அடிகள் சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் விதிகளை மீறி பேனர் வைத்ததாக அஜித், விஜய் ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு
சென்னை நடிகர் அஜித்தின் துணிவு படம் பார்க்க வந்த இடத்தில் ஆர்வமிகுதியில் சாலையில் சென்ற லாரியின் மீது ஏறி நடனம் ஆடிய சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்த பரத்குமார் என்ற 19 வயது இளைஞர் எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் உயிரிழப்பு
நடிகர் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ள நிலையில், அவரது ரசிகர்கள் தியேட்டர் வாசலில் மண்டியிட்டு வந்து, விஜய்யின் ஆளுயர கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து கொண்டாட்டம்.
வாரிசு படத்தின் முதல் காட்சியை ரோகிணி தியேட்டரில் பார்த்துவிட்டு தமன் கண்கலங்கியுள்ளார்.
வாரிசு படத்தின் விமர்சனம் : Varisu Review: அன்பு பாதி... ஆக்ஷன் மீதி... விஜய்க்கு கைகொடுத்ததா வாரிசு... முதல் எக்ஸ்பிரஸ் விமர்சனம் இங்கே..!
நடிகர் அஜித்குமார் நடித்த துணிவு படம் ரிலீசான நிலையில், முன்னதாக சென்னை ரோகிணி தியேட்டரில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ரசிகர்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்ததால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
சிறப்புக் காட்சிக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் ஏற்கெனவே விற்பனை செய்யப்பட்டு விட்டதால், அதற்கான பணத்தை திருப்பித் தருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும், ரசிகர்கள் ஆவேசத்துடன் ஏதேனும் அசம்பாவிதங்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் திரையரங்கங்களின் உரிமையாளர்கள் முன்னதாக புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் வல்லவனை நேரில் சந்தித்தப் பேசினர்.
இதனை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் வல்லவன், புதுச்சேரியில் 'துணிவு' திரைப்படத்தின் நள்ளிரவு ஒரு மணி சிறப்புக் காட்சியை திரையிட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார்.
வாரிசு படத்தின் சிறப்புக்காட்சி சென்னை, சத்யம் திரையரங்கில் தொடங்கியது. பத்திரிகையாளர்கள், நட்சத்திரங்களுக்கான சிறப்புக்காட்சி திரையிடப்பட்டு வரும் நிலையில் வாரிசு படத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் அது குறித்த படம் பகிரப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதுமுள்ள திரையரங்குகளில் நாளை காலை 4 மணிக்கு வாரிசு முதல் காட்சி திரையிடப்பட உள்ளது. இந்நிலையில், சென்னை திரையரங்குகள் கொண்டாட்ட மோடில் வண்ணமயமாகக் காட்சி அளிக்கின்றன.
ஆடியோ தரம் உள்ளிட்ட காரணங்களால் வாரிசு படம் சிங்கப்பூரில் நாளை வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, வாரிசு படம் சிங்கப்பூரில் நாளை மாலை வெளியாகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 1 மணிக்கு அஜித் நடிக்கும் துணிவு திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், காஞ்சிபுரம் பாபு திரையரங்கில் ரசிகர் ஒருவர் அஜித் புகைப்படம் பச்சை குத்தியபடியும் முதுகில் கொக்கியால் துளைத்து கிரேனில் தொங்கியபடியும் 20 அடி கட் அவுட்டுக்கு மாலை அணிவித்து கொண்டாடியுள்ளார்.
தியேட்டர் வளாகத்தில் பெரிய பேனர் வைப்பதற்கும் பாலாபிஷேகம் செய்வதற்கும் அனுமதியில்லை என முன்னதாக தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வங்கிக் கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள துணிவு படம் நாளை வெளியாக உள்ள நிலையில், திருநெல்வேலி முழுவதும் 2000 ரூபாய் நோட்டு மாதிரிகளின் வடிவில் அஜித் ரசிகர்கள் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர்.
“துணிவு படம் ஆக்ஷன் எண்டெர்டெய்னரா” என்ற கேள்விக்கு இயக்குநர், நடிகர் சமுத்திரக்கனி அளித்துள்ள பதில் கவனமீர்த்துள்ளது.
துணிவு ஆக்ஷன் எண்டெர்டெய்னரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, இல்லை, ”பணத்தைப் பற்றிய முக்கியமான கருத்துள்ள பக்கா குடும்ப எண்டெர்டெய்னர் படம் துணிவு” என சமுத்திரக்கனி தெரிவித்துள்ளார்.
முன்பதிவு செய்யப்பட்ட துணிவு, வாரிசு பட டிக்கெட்டுகள் ட்விட்டரில் கூடுதல் விலைக்கு விற்கப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜய், அஜித் ரசிகர்கள் இதற்கு சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
புதுச்சேரியில், துணிவு படத்தின் நள்ளிரவு 1.30 மணி சிறப்பு காட்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவு காட்சியை அதிகாலை 5 மணிக்கு திரையிட மாவட்ட ஆட்சியர் வல்லவன் உத்தரவு.
”என்னதான் மாஸ் நடிகரை வைத்து படம் எடுத்தாலும் திரைக்கதை சரியாக அமைந்தால் மட்டுமே அவர்களாலும் அதை வெற்றிக்கு நகர்த்த முடியும். கதை இல்லாமல் ஹீரோவை மட்டுமே வைத்து படத்தை வெற்றிப்படமாக்க முடியாது” என துணிவு பட தயாரிப்பாளர் போனி கபூர் தன் சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. இதனை முன்னிட்டு அப்படத்தின் இசையமைப்பாளர் தமன் தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் வாரிசு படத்தின் அனைத்து உணர்ச்சிகரமான காட்சிகளையும் பார்த்து நெகிழ்ந்து அழுதேன். வாரிசு திரைப்படம் என் குடும்பத்திற்கு சமமானது. என் இதயத்திற்கு நெருக்கமான படம். இந்த மிகப்பெரிய வாய்ப்பை எனக்கு வழங்கியதற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் தியேட்டரில் பேனர்கள், பாலாபிஷேகம் போன்ற செயல்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவு
நடிகர் விஜய் நடித்த வாரிசு மற்றும் நடிகர் அஜித் நடித்த துணிவு படம் நாளை வெளியாகவுள்ள நிலையில் ஜனவரி 13 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை அதிகாலை 4 மற்றும் 5 மணி சிறப்புக்காட்சிகளை ரத்து செய்ய தமிழக அரசு உத்தரவு
Background
நடிகர் விஜய்யின் வாரிசு படமும், நடிகர் அஜித்தின் துணிவு படமும் வெளியாவதையொட்டி திரையுலகினர் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மூன்றாவது முறையாக இயக்குநர் ஹெச்.வினோத் - அஜித் குமார் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘துணிவு’. மஞ்சு வாரியர் இப்படத்தின் ஹீரோயினாக நடித்துள்ள நிலையில் ஜிப்ரான் இசையமைத்துள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ள நிலையில் தமிழக தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி துணிவு படத்தின் ட்ரெய்லர் வெளியானது. வங்கி கொள்ளையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகியுள்ள வாரிசு படத்தில் விஜய் நடித்துள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கும் நிலையில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியுள்ளது. ட்ரெய்லர் ஜனவரி 4 ஆம் தேதி வெளியானது.
வாரிசு, துணிவு ஆகிய இரண்டு படங்களும் நாளை (ஜனவரி 11) ரிலீசாகவுள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த ஜனவரி 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், ஜனவரி 17 ஆம் தேதி வரையிலான காட்சிகளுக்கான பெரும்பாலான டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டு விட்டது. மேலும் இரண்டு படங்களுக்கும் சமமான அளவில் காட்சிகளை ஒதுக்க வேண்டும் என்ற அடிப்படையில் நள்ளிரவு 1 மணிக்கு துணிவு படத்தின் முதல் காட்சியும், அதிகாலை 4 மணிக்கு வாரிசு படத்தின் முதல் காட்சியும் திரையிடப்படுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -