ஃபர்ஸ்ட் லுக்


நடிகர் விஜய்யின் 66ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு வாரிசு எனப் பெயரிடப்பட்டுள்ள நிலையில், இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது.  இன்று விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு இரண்டு போஸ்டர்கள் வெளியிடப்படும் என தயாரிப்பு நிறுவனம் நேற்றே இன்ப அதிர்ச்சி கொடுத்தது. அதன்படு இன்று காலை வாரிசு படத்தின் இரண்டாம் லுக் வெளியானது. குழந்தையோடு குழந்தையாக விஜய் சிரிக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று மாலை வாரிசு படத்தின் மூன்றாவது லுக் வெளியானது. 


வம்சி இயக்கும் இப்படத்தில் ஏற்கெனவே தென்னிந்திய திரைப்பிரபலங்கள் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடித்து வரும் நிலையில், இப்படம் ஒரு 'பான் இந்தியா' படமாக இருக்கும் எனப் பலரும் தெரிவித்து வந்தனர். படத்திற்கு தமன் இசையமைக்கிறார். கில்லி  படத்துக்கு பிறகு பிரகாஷ்ராஜும் விஜயோடு சேர்ந்து இப்படத்தில் நடித்து வருகிறார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக அவரது தீவிர ரசிகையும் தெலுங்கு திரையுலக பிரபல நடிகையுமான ரஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 






வாரிசு..


முன்னதாக நேற்று மாலை first look போஸ்டரை மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த விஜய் ரசிகர்கள் #thalapathy66FLDay என்ற ஹேஷ்டேக்கினை டிவிட்டரில் ட்ரெண்டாக்கி அதகளம் செய்து வந்தனர். படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்ற எதிர் பார்ப்பும் அதிகரித்திருந்த நிலையில், ''வாரிசு'' என்ற டைட்டிலுடன் தளபதி 66 படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. வாரிசு தலைப்புக்கு ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களே எழுந்துள்ளன. 






வெற்றிப்படங்களை கொடுத்து ரசிகர்களின் இளைய தளபதியாக உருவெடுத்த பிறகு, 2003ம் ஆண்டு வசீகரா என்ற காதல் ரொமாண்டிக் படத்தில் பூபதி என்ற வேடத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு பிரபுதேவாவின் இயக்கத்தில் வில்லு என்ற ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். அதே ஆண்டு வேட்டைக்காரன் என்ற படத்திலும் நடித்தார். இதன் பின்னர், 2011ம் ஆண்டு வேலாயுதம் என்ற படத்தில் விஜய் நடித்தார். இந்த நிலையில், 12 ஆண்டுகளுக்கு பிறகு வி ( ஆங்கிலத்தில்) வரிசையில் அதாவது வாரிசு படத்தில் நடிக்கிறார்.