நடிகர் விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படம் உருவாகி வருகிறது. இப்படத்தில்  நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது. வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரித்துள்ளார். தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.




பொங்கல் ரிலீஸ்:


ரசிகர்களின் பல நாட்கள் எதிர்பார்ப்பாக பார்க்கப்பட்டுவரும் படம் வாரிசு. ராஷ்மிகா மந்தனா, நடிகர் பிரபு, குஷ்பு உள்ளிட்ட நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ளாதால் அந்த எதிர்பார்ப்பு மேலும் எகிறியுள்ளது. சில நாட்களுக்கு முன்னர் வரும் பொங்களுக்கு இப்படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அது மட்டுமன்றி அஜித் நடித்துள்ள வலிமை படமும் பொங்களையொட்டி வெளியாகும் என தகவல் வெளியானது. இதனால், வாரிசு படத்தின் மீதுள்ள எதிர்பார்பு விஜய் ரசிகர்களுக்கு எக்கச்சக்கமாக உள்ளது. 




தீ-தளபதி!


தளபதி விஜய் திரையுலகிற்கு வந்து 30 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனைக் கொண்டாடும் வகையில், 30 வருட விஜயின் சினிமா வாழ்கையை கொண்டாடும் நேரமிது.. வாரிசு அப்டேட் வெளியாகும்” என தயாரிப்புக் குழுவின் ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, வாரிசு படத்தின் அப்டேட்டும் நேற்று வெளியானது. 


இந்த அப்டேட்டில், வாரிசு படத்தின் இரண்டாம் பாடலாக “தீ தளபதி” என்ற பாடல் வரும் டிசம்பர் 4 ஆம் தேதியன்று மாலை 4 மணிக்கு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதன் பின்னணியில் செஸ் போர்ட்டில் இடம் பெறும் ராஜா காயின் தீ பிடித்து எரிவது போல போஸ்டர் டிசைன் செய்யப்பட்டிருந்தது. இந்த பாடல் குறித்த இன்னொரு செய்தியையும், வாரிசு படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. 


ஹீரோவுக்காக ஹீரோ பாடிய பாடல்:


தீ-தளபதி பாடல் குறித்த செய்தி வெளியானதிலிருந்து பலரும் இது குறித்த அடுத்த அப்டேட்டை எதிர்நோக்கி பலரும் ஆவலுடன் இருந்தனர். அவர்களின் ஆவலை தணிக்கும் வகையில், தற்போது ஒரு அறிவிப்பை ஸ்ரீ வெங்கடெஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், தீ-தளபதி பாடலை பாடியதற்காக நடிகர் சிம்புவிற்கு நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்புவின் நடிப்பு மட்டுமன்றி, அவரது குரலுக்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அந்த ரசிகர்கள், தீ-தளபதி பாடலைக் கேட்க மிகுந்த ஆர்வமுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். 


 






வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிளான இப்பாடல், நாளை நான்கு மணிக்கு  வெளியாகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்துக் கொண்டிருக்கின்றனர்.