’வாரிசு’ படத்தின் முதல் சிங்கிள் தீபாவளி அன்று வெளியாகும் என இசையமைப்பாளர் தமன் தெரிவித்துள்ளார்.


சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் படம் குறித்த தெலுங்கு நிகழ்ச்சி ஒன்றில்  கலந்துகொண்ட இசையமைப்பாளர் தமன் இதனைத் தெரிவித்துள்ளார்.


 






விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘வாரிசு’. தமிழில் 'வாரிசு' என்ற பெயரிலும் தெலுங்கில் 'வாரசுடு' என்ற பெயரிலும் இந்தத்திரைப்படம் வெளியாக உள்ளது.


இப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல் பிரகாஷ்ராஜ், சரத்குமார், பிரபு, ஷாம்,சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்துள்ளது.


குடும்பக் கதையாகி உருவாகி வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை தெலுங்கின் மிகப்பெரிய தயாரிப்பாளரான தில் ராஜூ தயாரிக்கிறார். 


 






தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளும் வெளிவர இருக்கும் இந்த திரைப்படம்  தீபாவளிக்கு வெளியாகும் என முன்னர் அறிவிக்கப்பட்டு, பின்னர் படப்பிடிப்பு முடியாத காரணத்தால் பொங்கல் ரிலீஸ் என தள்ளி வைக்கப்பட்டது. படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.


இதுவரை வாரிசு படத்தின் மூன்று போஸ்டர்கள் வெளியாகி, மக்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏற்கெனவே தீபாவளி அன்று படம் வெளியாகும் என எதிர்பார்த்து ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்த நிலையில், தமன் தெரிவித்துள்ள இத்தகவல் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.