வாரிசு படத்தின் டெலிட்டட் காட்சியை இணையத்தில் பகிர்ந்து விஜய் ரசிகர்கள் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Continues below advertisement

இந்த ஆண்டு பொங்கல் வெளியீடாக திரையரங்குகளில் ரிலீசான நடிகர் விஜய்யின் வாரிசு படம் குடும்ப ஆடியன்ஸைக் கவர்ந்து பெரும் வெற்றி பெற்றது.

ஜனவரி 11ஆம் தேதி வெளியான வாரிசு படத்தில் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ், சரத் குமார், யோகிபாபு, ஜெயசுதா, ஷ்யாம், சங்கீதா, ஸ்ரீகாந்த் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்திருந்தது. தமன் இந்தப் படத்துக்கு இசையமைத்த நிலையில், இயக்குனர் வம்சி இயக்கியிருந்தார். வெளியானது முதலே குடும்ப ஆடியன்ஸைக் கவர்ந்து வரவேற்பைப் பெற்று வந்த வாரிசு படம், தொடர்ந்து வரவேற்பைப் பெற்றுதுடன், பொங்கல் ரிலீசாக வெளியான மற்றொரு படமான துணிவு படத்துடன் இணைந்து ரேஸில் நிதானமாகப் பயணித்து லைக்ஸ் அள்ளியது.

Continues below advertisement

தொடர்ந்து அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்திலும் வெளியாகி வரவேற்பை பெற்ற வாரிசு படம், 300 கோடி வசூலைக் கடந்ததாக தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் முன்னதாக அறிவித்திருந்தது. வாரிசு பட பாடல் வீடியோக்களும் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த மார்ச் 1ஆம் தேதி இப்படம் 50 நாள்களைக் கடந்தது. 

இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்த நிலையில் இன்று வாரிசு படத்தின் டெலிட்டட் காட்சி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. படத்தின் வில்லன் பிரகாஷ் ராஜ் உடன் விஜய் உரையாடும் இந்தக் காட்சியில் விஜய் கபடி, கபடி என டயலாக் பேசுவது கில்லி படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நியாபகப்படுத்தும் வகையில் உள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்று இந்தக் காட்சி ட்ரெண்டாகி வருகிறது. 

திரையரங்கில் இந்தக் காட்சி இடம்பெறவில்லை. பிப்ரவரி 22ஆம் தேதி இந்தப் படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், இந்தக் காட்சி ஓடிடி வெர்ஷனில் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், இந்தக் காட்சியை தற்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து நெருப்பு எமோஜிக்களை பறக்கவிட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: Nora Fatehi: தவறான எண்ணத்தில் தொட நினைத்த சக நடிகர்: ஓங்கி அறைந்த பிரபல நடிகை - நேர்காணலில் வெளியான பரபரப்பு தகவல்