நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் ரூ.300 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி 


நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 11 ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. வம்சி பைடிபள்ளி இயக்கிய இப்படத்தை தில் ராஜூ தயாரித்திருந்தார். இந்த படத்தில்  ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சரத்குமார், ஷாம், பிரபு, சங்கீதா, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சம்யுக்தா, பிரபு, பிரகாஷ்ராஜ், எஸ்.ஜே.சூர்யா, யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். தமன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். 






முன்னதாக படத்தின் தியேட்டர் விநியோக உரிமையை சென்னை, கோவை, ஆற்காடு, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட்  நிறுவனமும், மற்ற இடங்களில் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனமும் கைப்பற்றியிருந்தது.  ப்ரோமோஷன்களும் பலமாக நடந்த நிலையில், படம் வெளியானதும் கலவையான விமர்சனத்தைப் பெற்றது. ஆனால் தொடர் விடுமுறை, குடும்பக்கதை என படம் பற்றி வெளியான தகவல் அனைத்தும் 2 வாரங்களை கடந்தும் வாரிசு படத்தை கொண்டாட வைத்துள்ளது. 


வசூல் மேல் வசூல் 


3 வாரங்களை கடந்தும் கிட்டதட்ட பல இடங்களில் இன்றும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக வாரிசு படம் ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள வாரிசு படம் பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 






வாரிசு படம் வெளியான 7 நாட்களில் படம் உலகளவில் ரூ.210 கோடி வசூல் ஈட்டியதாகவும், தொடர்ந்து 12 நாட்களில் ரூ.250 கோடி வசூலைப் பெற்றதாகவும் அடுத்தடுத்து படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை ரசிகர்கள் கொண்டாடிய நிலையில், வாரிசு படம் ரூ.275 கோடி வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படம் ரூ.300 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.