ஆஸ்திரேலிய ஓபன் 2023 கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா மற்றும் சானியாமிர்சா ஜோடி தோல்வியை சந்திந்து இந்திய ரசிகர்களின் மனங்களை சுக்கு நூறாக உடைத்தது. போபண்ணாவை உற்சாகப்படுத்த அவரது மனைவி சுப்ரியா அன்னையாவும் இவர்கள் விளையாடும் போட்டியை ரசிக்கவும், உற்சாகப்படுத்தவும் மெல்போர்ன் வந்திருந்தார். இந்தநிலையில், போபண்ணாவின் மனைவியின் புகைப்படம்தான் இன்று இணையத்தில் அதிகமாக வைரலாகி வருகிறது. 


ரோகன் போபண்ணா:


கடந்த வெள்ளி கிழமை ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு பிரிவின் இரட்டையருக்கான இறுதி போட்டி நடைபெற்றது. இதில், இந்திய ஜோடிகளான சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடியும் பிரேசில்-ன் லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியும் மோதின.






இப்போட்டியில், 7-6, 6-2 என்ற செட் கணக்கில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, லூயிசா ஸ்டெபானி- ரபேல் மாடோஸ் ஜோடியிடம் தோல்வியை தழுவியது.


இதற்கு முன்பு, இது தான் தனது கடைசி கிராண்ட்ஸ்லம் போட்டி என்று சானியா மிர்சா குறிப்பிட்டிருந்தார்.தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சானியா மிர்சா தோல்வியுடன் வெளியேறியது, ரசிகர்களுக்கு மிகவும் கவலையை ஏற்படுத்தியது.






சுப்ரியா போபண்ணா:


2023 ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியில் ரோகன் போபண்ணாவை உற்சாகப்படுத்த அவரது மனைவி சுப்ரியா அன்னையாவும் மெல்போர்னில் வந்திருந்தார். சுப்ரியா போட்டியை பார்க்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சுப்ரியா குறித்து பெண் ரசிகர் ஒருவர், 'இவர் போபண்ணாவின் மனைவியா? நான் பார்த்ததில் மிக அழகான பெண் இவரா? 






பெண் ரசிகர் வைத்த கேள்விக்கு பதிலளித்த போபண்ணா, தன் மனைவி அழகான பெண்தான் என்று குறிப்பிடும் வகையில் ”நான் ஒப்புக்கொள்கிறேன்” என தெரிவித்தார். தற்போது போபண்ணா செய்த ரீ- ட்வீட் மற்றும் சுப்ரியா அன்னையாவின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்ட் அடித்து வருகிறார். 


ரோகன் போபண்ணா:


ரோகன் போபண்ணா இறுதிப்போட்டியில் மட்டும் வெற்றி பெற்றிருந்தால், இது அவருக்கு இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக இருந்திருக்கும். முன்னதாக, கடந்த 2017 ம் ஆண்டு போபண்ணா கேப்ரியேலா டப்ரோவ்ஸ்கியுடன் இணைந்து பிரெஞ்சு ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றிருந்தார். 


கிராண்ட்ஸ்லாம்  ஆண்கள் இரட்டையர் பிரிவில் போபண்ணாவின் சிறந்த ஆட்டம்:



  • ஆஸ்திரேலிய ஓபன்: சுற்று 3 (2008, 2011, 2012, 2014, 2016, 2018)

  • பிரெஞ்ச் ஓபன்: அரையிறுதி (2022)

  • விம்பிள்டன்: அரையிறுதி (2013, 2015)

  • யுஎஸ் ஓபன்: (2010) 


கிராண்ட்ஸ்லாம் கலப்பு இரட்டையர் பிரிவில் போபண்ணாவின் சிறந்த ஆட்டம்:



  • ஆஸ்திரேலிய ஓபன்: இறுதிப் போட்டி (2018, 2023)

  • பிரெஞ்ச் ஓபன்: வெற்றியாளர் (2017)

  • விம்பிள்டன்: காலிறுதி (2013, 2017)

  • யுஎஸ் ஓபன்: அரையிறுதி (2015)