வாரிசு படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.

  


விழாவுக்கு கிரே நிற சட்டை, வெள்ளை பேண்ட் சகிதம் முன்னதாக அரங்கம் அதிர விஜய் மாஸ் எண்ட்ரி கொடுத்தார்.  ரசிகர்கள் அருகின் விஜய்யை பார்க்கும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டிருந்த நிலையில், அதில் நடந்து சென்று விஜய் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.


அவர் வரும் போது பின்னணியில் வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடல் ஒலிபரப்பப்பட்டது.  விஜய் வருகை தந்த புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது.


முன்னதாக இவ்விழாவில் பேசிய  பாடலாசிரியர் விவேக், விஜய் போன்ற எண்டெர்டெய்னரை இந்தியா இதுவரை பார்த்ததில்லை என பெருமிதம் தெரிவித்துள்ளார்.


”சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியம் கொடுக்கும்.  ஒரு இருட்டை ஒரு தீக்குச்சி எப்படி வெல்கிறதோ, அப்படித்தான் விஜய் என்ற காந்தம் இவ்வளவு பெரிய மாபெரும் கூட்டத்தைக் கவர்ந்து வைத்திருக்கிறது. படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு நாள் கூட செட்டில் அவர் மொபைல் பார்த்தது இல்லை. படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்தது இல்லை. கேரவனுக்கு சென்றதில்லை.


அவருடன் இருந்த காலங்களில், அவரைப்பற்றி ஒரு குறைகூட சொல்லாத அளவிற்கு அவர் நடந்து கொண்டார். எப்படி அவர் இப்படி இருக்கிறார் என்று ஆச்சரியமாக இருந்தது. அவரிடம் ஒரு சின்ன குறை சொல்ல முடியாது. அப்படி ஏதாவது சொல்ல வேண்டுமென்றால் அது அவரின் படம் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு பாஸ் கிடைப்பதை விட கடினம்.


படப்பிடிப்பில் அரசனாகவும், தளபதியாகவும் இல்லாமல் எங்களிடம் விஜய் ஒரு மனிதனாக நடந்து கொண்டார்.  இந்தியா விஜய் போன்று ஒரு எண்டெர்டெய்னரை பார்த்ததில்லை” என பெருமை பொங்க பேசியுள்ளார்.


மேலும் விழாவில் நடன இயக்குநர் ஜானி  - ராஷ்மிகா இருவரும் இணைந்து ரஞ்சிதமே பாடலுக்கு அரங்கம் அதிர நடனமாடினர்.






”பாடலின் கடைசி 1.20 நிமிடங்களில் ஒரே ஷாட்டில் விஜய் நடனமாடி இருக்கிறார்; அது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும்” என ஜானி மாஸ்டர் தெரிவித்துள்ளார்.