இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் இறுதிகட்ட அனிகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது. இத்திரைப்படத்தில் விஜயுடன் ராஷ்மிகா,குஷ்பு,ஷாம் ஆகியோர் நடித்துள்ளனர்.இத்திரைப்படம் வருகிற பொங்கலுக்கு திரைக்கு வர விருக்கிறது.இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடக்கவிருக்கிறது.அரங்கம் அமைப்பதற்கான பணிகள் வெகு தீவிரமாக நடந்து வருகிறது.
இசை வெளியீட்டு விழாவிற்கான பாஸ்கள் தற்போது ரெடியாகிவிட்டதாக அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில்," தளபதி அவர்களின் வாழ்த்துகளோடு, பொங்கலுக்கு திரைக்கு வர இருக்கும் நமது தளபதி விஜய் அவர்களின் #வாரிசு திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அனுமதி கூப்பன்களை அனைத்து மாநில,மாவட்ட தலைவர்களுக்கு அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் வழங்கப்பட்டது." என குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனியிடத்தை தக்கவைத்துக் கொண்டு முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். இவரது மார்க்கெட்டும் ரசிகர் பட்டாளமும் இமய மலைக்கு ஒப்பானது. இவர் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் ' வாரிசு' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
'தமிழில் இயக்குனர் வம்சி நடிகர் கார்த்தியை வைத்து ' தோழா' திரைப்படத்தை இயக்கி தமிழ் மக்கள் மனதில் பரிட்சையமானார்.விஜய் 'வாரிசு' திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க விருக்கிறார்.இந்த திரைப்படம் குறித்தான அதிகாரப் பூர்வ அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது