நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் வாரிசு. இப்படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் நேரடியாக வெளியிடப்படுகிறது. படத்தில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிக்கிறார். இதனை தெலுங்கு திரையுலக இயக்குனர் வம்சி டைர்ட்டு செய்கிறார். குஷ்பு, யோகி பாபு, சரத்குமார், ஷாம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 


‘பர்ஸ்ட் லுக்’ வெளியானது முதல், ரசிகர்களிடமிருந்து பல விமர்சனங்களை எதிர் கொண்டு வருகிறது வாரிசு திரைப்படம்.  இப்படி ரசிகர்களின் எக்கச்சக்க விமர்சனங்கள் ஒருபுறமிருக்க, மற்றொரு புரம் படத்தின் காட்சிகள் அவ்வப்போது ‘லீக்’ ஆகி படக்குழுவிற்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. 


 






லீக் ஆன காட்சிகள்


சமீபத்தில் கூட நடிகர் விஜய், ஒரு பாடலுக்கு நடனமாடும் காட்சி வெளியாகி படக்குழுவை ஆட செய்தது. இதற்கு முன்னரும் நடிகர்கள் விஜய் மற்றும் பிரபு இடம்பெற்ற ஒரு காட்சியும் இணையத்தில் கசிந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு முன்னரும், விஜய் கோட் சூட்டில் பேசுவது போன்ற ஒரு காட்சியும் வெளியாகி படக்குழுவினருக்கு ‘பகீர்’ கொடுத்தது.  இப்படி திருட்டுத்தனமாக படம்பிடிக்கப்பட்டு வெளியிடப்படும் காட்சிகளால் ரசிகர்களுக்கு படத்தின் மேல் உள்ள ஆர்வம் குறைந்து விடுமோ என படக்குழு பயந்து கொண்டிருக்கிறது. படக்குழுவை விட விஜய் ரசிகர்கள் இதனால் டென்ஷனாகி வருகின்றனர். இப்படியே ‘சூட்டிங்கும்’ ‘லீக்’குமாய் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.


“அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க..”


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்து வருபவர், ரவிச்சந்திரன். இவர் தற்போது ஒரு நேர்காணலில் வாரிசு படத்தின் சூட்டிங்கின் போது தனக்கு நேர்ந்த அனுபவத்தை மிகுந்த மன உளைச்சலுடன் பகிர்ந்துள்ளார். “சூட்டிங் ஸ்பாட்டிற்கு போனவுடன் மேக்-அப் போட்டு, காஸ்டியூம் போட்டு உக்காந்துட்டேன்..டைரக்டர் என்னை ஒரு பார்வை பார்த்துவிட்டு கேரவனில் உக்கார சொன்னதாக ஒருவர் வந்து சொன்னார்” என்று ஆரம்பிக்கிறார் ரவிசந்திரன். பிறகு இவர் அந்த கேரக்டருக்கு ரொம்ப ‘ரிச்’ ஆக இருப்பதாக கூறி, டைரக்டர் இவரை கிளம்ப சொல்லியதாக “அசிங்கப்படுத்தி அனுப்பிட்டாங்க..” என மனம் வெதும்பி ஷேர் செய்கிறார் ரசிசந்திரன். 


"மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.."


“இந்த மாறி ரஜினி சார் கூட நடித்த படத்தில் கூட நடந்ததில்லை, இதுவரை நடித்த எல்லா இடத்திலும் நல்ல பெயர் தான். அப்படியிருந்தும் நம்மள இவ்ளோ அசிங்கப்படுத்திடாங்களேன்னு மூனு நாளா ரொம்ப மன உளைச்சலில் இருந்தேன்” என்கிறார் ரவி.  “என்னைக் கூப்பிட்ட மேனேஜரிடம் ‘விஜய் சார் கிட்ட போய் இந்த சம்பவத்த முறையிடவா?-ன்னு கேட்டேன், அவர் கையெடுத்து கும்பிடாத குறையா ‘விஜய் சார்கிட்டெல்லாம் போகாதீங்கனு கேட்டுகிட்டார் “இந்த விஷயத்த விஜய் சார் காதுக்கு போச்சா?” என்ற கேள்விக்கும் “போரத்துக்கான வாய்ப்பு ஏதும் இல்லை, அவரு எங்கையோ இருக்காரு நான் எங்கையோ இருக்கேன் ” என்று தான் பதிலளிக்கிறார் ரவிசந்திரன்.