வரலக்ஷ்மி சரத்குமார் (Varalaxmi Sarathkumar) நடிக்கும் சைக்காலஜிக்கல் திரில்லரான 'சபரி' திரைப்படம் மே மாதம் ரிலீசாகிறது.


தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தமிழ் மொழிகளில் தனித்துவமான நடிகையாக வலம் வரும் வரலக்ஷ்மி சரத்குமார், தேர்தெடுத்த கதைகளில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் ‘சபரி’


இயக்குநர் அனில் கட்ஸ் இயக்கத்தில், மஹா மூவீஸ் சபரி திரைப்படத்தினை தயாரித்து உள்ளது. உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வரும் மே 3ஆம் தேதி இப்படம் வெளியாகத் தயாராக உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் இப்படம் வெளியாகவிருக்கிறது.


இந்தப் படத்தில் நடிகை வரலக்ஷ்மி லீட் கதாபாத்திரத்தில் நடிக்க, நடிகர்கள் கணேஷ் வெங்கட்ராம், ஷஷாங்க், மைம் கோபி, சுனைனா, ராஜஸ்ரீ நாயர், மதுநந்தன், ரஷிகா பாலி (பம்பாய்), 'விவா' ராகவா, பிரபு, பத்ரம், கிருஷ்ண தேஜா, பிந்து பகிடிமரி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  எமோஷனல் மற்றும் பல திரில்லிங்கான தருணங்களைக் கொண்ட இந்தப் படம் சைக்கலாஜிக்கல் திரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அதிரடி இப்படத்துக்காக வரலக்‌ஷ்மி பல அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளிலும் அசத்தியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.


மஹா மூவீஸுக்காக மகேந்திர நாத் கொண்ட்லா இப்படத்தைத் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் அனில் கட்ஸ் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் ஆகியவற்றை அவரே கையாண்டுள்ளார். மகரிஷி கொண்ட்லா படத்தை வழங்குகிறார். 


கோபி சுந்தர் இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராகுல் ஸ்ரீவத்சவ் - நானி சாமிடிசெட்டி ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் விறுவிறுப்பான ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனமீர்த்தது குறிப்பிடத்தக்கது.


வரலக்‌ஷ்மி தற்போது சினிமா பயணம் தாண்டி, தன் வருங்காலத் துணையை அறிமுகம் செய்து வைத்து மணப்பெண்ணாக மற்றொருபுறம் தயாராகி வருகிறார்.


மும்பையைச் சேர்ந்த தொழில் அதிபர் நிகோலாய் சச்தேவ் என்பவருடன் வரலட்சுமிக்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், இது குறித்த அறிவிப்பினை அவரது குடும்பத்தார் மகிழ்ச்சியுடன் சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். விரைவில் இவர்களது திருமண தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரலக்ஷ்மி தற்போது தனுஷின் ராயன் திரைப்படத்திலும் முக்கியக் கதாபாத்திரம் ஒன்றில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Vijay Antony: ரோமியோவை அன்பே சிவம் ஆக்கிடாதீங்க: ப்ளூ சட்டை மாறனை கடிந்து கொண்ட விஜய் ஆண்டனி


Pushpa 2 : அல்லு அர்ஜூன் ரசிகர்கள் இதை கவனிச்சீங்களா? பாட்டில் கதையை வைத்த புஷ்பா 2 இயக்குநர்