தமிழ் சினிமாவில் சுப்ரீம் ஸ்டார் என கொண்டாடப்பட்ட நடிகர் சரத்குமார் மகளும் பிரபல தென்னிந்திய திரைப்பட நடிகையான வரலட்சுமி  சரத்குமாருக்கும் நிக்கோலாய் சச்தேவுக்கும் இன்று (ஜூலை 2 ) திருமணம் நடைபெற உள்ள நிலையில் திருமணத்துக்கு முன்னதான கொண்டாட்டமான மெஹந்தி பங்ஷன் கொண்டாட்டங்கள் சென்னையில் கோலாகலமாக  நடைபெற்றன. அதன் புகைப்படங்களை ராதிகாவின் மூத்த மகளான ராயனே மிதுன் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு இருந்தார். அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகின. 


Varalaxmi Sarathkumar : தாய்லாந்தில் திருமணம்... கோலாகலமாக நடைபெற்ற வரலட்சுமியின் மெஹந்தி பங்க்ஷன்...


பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தாலும் தன்னுடைய நடிப்பு திறமையாலும் நேர்த்தியாக கதாபாத்திரங்களை தேர்வு செய்து படிப்படியாக முன்னேறி வருகிறார். கதாநாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று இல்லாமல் நெகட்டிவ் ரோல், குணச்சித்திர கதாபாத்திரம் என தனக்கு எந்த கதாபாத்திரம் கொடுக்கப்பட்டாலும் அதை சிறப்பாக நடித்து அசத்த கூடியவர். 


அடுத்தடுத்து படங்களில் பிஸியாக நடித்து வந்த வரலட்சுமி திடீரென தன்னுடைய நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார். மும்பையை சேர்ந்த தொழிலதிபரான நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் கடந்த பிப்ரவரி மாதம் மும்பையில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொள்ள எளிமையாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 14 ஆண்டு காலமாக நண்பர்களாக இருந்து பின்னர் காதலர்களாக மாறி இன்று கணவன் மனைவியாக இணைய உள்ளனர். 


நிச்சயதார்த்தம் சிம்பிளாக நடைபெற்று இருந்தாலும் திருமணத்திற்கு ரஜினிகாந்த், கமல்ஹாசன் முதல் சமந்தா, நயன்தாரா வரை ஏராளமான பிரபலங்கள், பிரதமர் உட்பட பல அரசியல் தலைவர்களுக்கும் திருமண அழைப்பிதழ் வைக்கப்பட்டு வரவேற்கப்பட்டனர். 






 


மெஹந்தி பங்ஷன் தீம் பச்சை நிறம் என்பதால் மணமகன் - மணமகள் உட்பட அனைவரும் மஞ்சள் கலந்த பச்சை நிறத்திலான உடையில் பசுமையாக காணப்பட்டனர். வரலட்சுமி - நிக்கோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் திருமணம் நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இந்த விழாவில் திட்டமிட்டபடி திரை பிரபலங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.