தமிழ் சினிமாவின் பிரபலமான தயாரிப்பு நிறுவனமான சூப்பர் குட் பிலிம்ஸ் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளது. 1980ல் தொடங்கிய இவர்களின் பயணம் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் படங்களை தயரித்துள்ளது. துள்ளாத மனமும் துள்ளும், நீ வருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும், ஆனந்தம் உள்ளிட்ட படங்கள் இவர்களின் முத்திரை படித்த திரைப்படங்களாகும். இந்த நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வரும் ஆர்.பி. செளத்ரியின் மகனான நடிகர் ஜீவாவை வைத்து தயாரித்துள்ள 92 வது திரைப்படம் 'வரலாறு முக்கியம்'. நல்ல நல்ல படைப்புகளை மக்களுக்கு வழங்கும் சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால் 'வரலாறு முக்கியம்' படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாக உள்ளது.  


 



 


மீண்டும் அப்பா - மகன் கூட்டணி : 


சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஆர்.பி. செளத்ரி தயாரிப்பில் சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்த திரைப்படம் 'கச்சேரி ஆரம்பம்'. ஜீவாவின் வெற்றி படங்களாக கருதப்படும் கச்சேரி ஆரம்பம், ரெளத்திரம் உள்ளிட்ட படங்களை சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரித்து வழங்கியது. இந்நிலையில், பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் 'வரலாறு முக்கியம்' திரைப்படத்தை தயாரிக்கிறது சூப்பர் குட் ஃபிலிம்ஸ்.


 






 


டிசம்பர் 9ம் தேதி திரையரங்குகளில் வெளியாக தயாராக உள்ள நிலையில் தற்போது படத்தின் பிரஸ் மீட் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஜீவா, விடிவி கணேஷ், காஷ்மீரா, பிராக்யா மற்றும் பலர் கலந்து கொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்தனர்.  இந்த பிரஸ் மீட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகிறது. ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுத்துற பூமி... பாடல் நவம்பர் 30ம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது.