சிம்பு ஜோடியாக துறுதுறுப்பான நடிகையாக 'போடா போடி' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமார். தமிழ் மற்றும் தெலுங்கில் மிகவும் பிஸியாக நடித்து வரும் வரலட்சுமிக்கு திரை வாழ்க்கையில் ஒரு டர்னிங் பாயிண்ட்டாக அமைந்தது விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 , தாரை தப்பட்டை போன்ற திரைப்படங்கள். சமீபத்தில் அவருடன் நடைபெற்ற நேர்காணலில் ஒரு அதிர்ச்சியான தகவலை தெரிவித்தது இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  



திருப்புமுனையாக அமைந்த படங்கள் :


விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'போடா போடி'. இந்த திரைப்படத்தில் தேர்ந்த நடன கலைஞராக நடித்த வரலட்சுமிக்கு அடுத்தடுத்து தமிழ் மற்றும் தெலுங்கில் வாய்ப்புகள் பல குவித்தாலும் தாரை தப்பட்டை திரைப்படம் பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அடுத்து அவர் நடித்த விக்ரம் வேதா சிறந்த ஒரு திரைப்படமாக அமைந்து பாராட்டுகளை பெற்று தந்தது. நடிகர் விஷால் நடித்த சண்டக்கோழி 2 திரைப்படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் வெகு சிறப்பாக நடித்திருந்தார். இடையில் நடிகர் விஷாலுடன் காதல், திருமணம் என கிசு கிசுக்கப்பட்டது. அதற்கு பிறகு அப்படியே நமத்துப்போன பட்டாசு போல அடங்கிப்போனது. 


வரலட்சுமி சொன்ன பதில் :


சமீப காலமாக திரைத்துறையில் பல நடிகைகளும் அவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றியும், அட்ஜஸ்ட்மென்ட் குறித்தும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. பலரும் அதை வெளிப்படையாக தெரிவித்தும் உள்ளனர். அந்த வகையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் பங்கேற்ற நேர்காணலில் தன்னையும் அட்ஜஸ்ட்மெண்ட் செய்ய முடியுமா என அழைப்புகள் வந்தன என பகிரங்கமாக தெரிவித்தார்.


”நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது என்பதற்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்பவள் நானில்லை” என்றுள்ளார். அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவையில்லை என மறுத்துள்ளேன். எந்த ஒரு குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இரவில் தூங்க வேண்டும். அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாழ்ந்தால் நிம்மதியாக வாழ முடியாது. எனக்கு அது தேவையும் இல்லை. 


நடிகைகளின் வெளிப்படையான ஸ்டேட்மென்ட் :


திரைத்துறையில் அட்ஜஸ்ட்மென்ட் என்ற வார்த்தை அவ்வப்போது அடிபடுகிறது. பல நடிகைகளுக்கும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பகிர்ந்து வருகிறார்கள். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்களின் பட்டியலில் தற்போது இணைந்துள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். பிரபலமான நடிகரின் மக்களுக்கே இந்த நிலைமை என்றால் மற்ற நடிகைகள், அறிமுக நடிகைகளின் நிலைமைகளை நினைத்தால் அதிர்ச்சியாக உள்ளது. வரலட்சுமி சரத்குமாரின் இந்த ஸ்டேட்மென்ட் திரையுலத்தினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.