நீண்ட நாள் காதலியான பென்சியாவை சில தினங்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார் விஜய் டிவி ஸ்டாரான புகழ். புகழ் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. பிரபலங்களை ரசிகர்கள் என பலரும் அவருக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
புகழுக்கு வனிதா வாழ்த்து:
புகழுக்கு திருமண வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் திரை பிரபலமான வனிதா விஜயகுமார். அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் வனிதா. அவருடன் நடிகை ஷகிலா, குக் வித் கோமாளி பிரபலம் பாலா மற்றும் பலர் உள்ளனர். வனிதா புகைப்படங்களையும் பதிவிட்டு " கடவுள் உங்கள் இருவரையும் ஆசிர்வதிக்கட்டும். நீங்கள் இருவரும் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வாழ்த்துக்கள். நல்ல பாத்துகோடா தம்பி..." என ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார் வனிதா விஜயகுமார்.
படிப்படியான முன்னேற்றம்:
விஜய் டிவியில் தனது பயணத்தை ஒரு சிறிய அளவில் ஆரம்பித்து பின்பு படிப்படியாக உயர்ந்த வெள்ளித்திரையில் மின்னுபவர்கள் பலர். அதில் ஒருவரான புகழ் தனது வித்தியாசமான சேஷ்டைகளால் அனைவரையும் கட்டி போட்டவர். அதும் அவர் புகழின் உச்சிக்கு சென்றது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தான். நீண்ட நாள் காதலியான பென்சியாவை ஏற்கனவே பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றாலும் பெற்றோர் சம்மதித்திற்கு பிறகு இந்து முறைப்படியும் முஸ்லீம் முறைப்படியும் மறுபடியும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.
வடிவேல் பாலாஜி - புகழ் நட்பு :
புகழ் இந்த நிலைமைக்கு வர முக்கியமான காரணமாக இருந்தது விஜய் டிவியின் கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் பிரபலமான வடிவேல் பாலாஜி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் காலமானார். புகழ் இன்றும் வடிவேல் பாலாஜி மீது அளவு கடந்த பாசம் வைத்துள்ளார். அதன் வெளிப்பாடாக தனது திருமணம் முடிந்தவுடன் அவரின் நினைவாக ஒரு பதிவை போஸ்ட் செய்துள்ளார். இது புகழின் ரசிகர்களை நெகிழ செய்துள்ளது.
புகழ் - வனிதா நட்பு:
புகழ் - வனிதா நட்பு என்பது மிகவும் ஸ்ட்ராங்காக ஆனது குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் தான். புகழ் திருமண கொண்டாட்டத்தில் பல விஜய் நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். புகழுக்கு ஏராளமான ரசிகர்கள் உலகளவில் உள்ளனர். சார் இப்ப வெள்ளித்திரையில் ரொம்ப பிஸி.