பணத்தாலும் , பி.ஆர் செல்வாக்கை பயன்படுத்தியும் பிக்பாஸ் டைட்டிலை அர்ச்சனா வென்றதாக வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
பிக்பாஸ் டைட்டில் வின்னர்
பிக்பாஸ் தமிழின் 7-வது சீசன் நேற்று முடிவுக்கு வந்தது. மொத்தம் 106 நாட்கள் நடைபெற்ற இந்த சீசன் 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து வைல்டு கார்டில் மேலும் போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைய மொத்தம் 23 போட்டியாளர்கள் இந்த சீசனில் பிக்பாஸ் டைட்டிலுக்காக போட்டி போட்டார்கள்.
இறுதியாக நேற்று ஜனவரி 14 ஆம் தேதி மொத்தம் ஐந்து போட்டியாளர்களுடன் தொடங்கிய கிரண்ட் ஃபினாலேவில் இறுதியில் அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார். மற்ற சக போட்டியாளர்களான மாயா கிருஷ்ணன் , தினேஷ் , விஷ்ணு, மணிச்சந்திரா உள்ளிட்ட நால்வரை விட பலமடங்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் அர்ச்சனா வெற்றிபெற்றுள்ளார். மாயா கிருஷ்ணன் 23053 வாக்குகள் பெற்றிருக்க மணிச்சந்திரா 35184 வாக்குகள் பெற்றிருந்தார். மறுபக்கம் அர்ச்சனா 109468 வாக்குகளைப் பெற்றிருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை வைல்டு கார்டில் உள்ளே வந்து டைட்டிலை வென்ற முதல் போட்டியாளர் அர்ச்சனா.
டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்ட பின் அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்து வருகின்றன. இதில் ஒரு தரப்பினார் இந்த முடிவு சார்புடையதாக இருப்பதாகவும் மறுதரப்பு அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டிருப்பது சரியான முடிவு தான் என்று விவாதம் செய்து வருகிறார்கள்.
அதிருப்தி தெரிவித்த வனிதா விஜய்குமார்
ஒரு பக்கம் அர்ச்சனாவுக்கு பாராட்டுகள் பெருகி வர மறுபக்கம் வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்து வருகிறார். பிக்பாஸ் ஃபைனல் நிகழ்ச்சியில் தான் கலந்துகொண்டதாகவும் ஆனால் கமல்ஹாசன் அர்ச்சனாவின் கையை உயர்த்தும்போது தான் கடுப்பாகி அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட்டதாகவும் வனிதா விஜயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் மாயா கிருஷ்ணன் இருந்தபோது அர்ச்சனாவை டைட்டில் வின்னராக தேர்வு செய்தது முற்றிலும் திட்டமிட்ட செயல் என்று அவர் கூறியுள்ளார்.
பணம் , ப்ரோமோஷன்களை பயன்படுத்தியே அர்ச்சனா டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார் , அந்த மேடையில் ஜனநாயகம் தோற்றும் பணநாயகம் ஜெயித்ததாகவும்வனிதா பேசியிருக்கிறார்.
மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தன்னிடம் வந்து பேசியதாகவும் அவர்களுக்கும் இந்த அதிருப்தி தெரிவித்ததாகவும் வனிதா தெரிவித்தார். தனது மகள் ஜோவிகா போட்டியாளராக இருந்ததால் தான் வெளிப்படையாக சில விஷயங்களை பேச முடியாது என்று அவர் கூறினார்.
இன்ஸ்டாகிராம் , முகநூல் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் அர்ச்சனாவுக்கு ஆதரவாக ப்ரோமோஷன்களின் வழியாகவே அர்ச்சனா இந்த டைட்டிலை வென்றுள்ளதாக சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் படிக்க : Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!
Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!