தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. சமீபத்தில் தனது கணவர் நாக சைத்தான்யாவிடம் இருந்து விவாகரத்து பெற்றார். அது குறித்த அறிவிப்பை கணவன் . மனைவி இருவருமே சமூக வலைத்தளங்களில் அதிகார்ப்பூர்வமாக அறிவித்திருந்தனர். இந்நிலையில் பலரும் சமந்தா விவாகரத்திற்கான காரணம் குறித்த வதந்திகளை பரப்ப தொடங்கிவிட்டனர்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சமந்தா , அவர்களின் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “''எனக்கு எதிரான வதந்திகளுக்கு எதிராக நிற்கும் அனைவருக்கும் நன்றி. என் மீதான உங்களின் அக்கறை என்னை திக்குமுக்காடச் செய்கிறது. என் மீது பல வதந்திகள் பரபப்படுகின்றன. நான் இன்னொருவர் மீது காதல் வயப்பட்டதாகவும், குழந்தை வேண்டாமென்றும் கூறியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும் சிலர் கூறுகிறார்கள். விவாகரத்து என்பதே வேதனையான ஒன்றுதான். தனி ஆளாக அந்தக் காயத்திலிருந்து மீள எனக்கு நேரம் எடுக்கும். இதற்கிடையே என் மீதான தொடர் வதந்திகளும், தனி நபர் தாக்குதலும் தொடர்கிறது. ஆனால் இதுவெல்லாம் என்னை ஒருபோதும் காயப்படுத்தாது'' என குறிப்பிட்டுருந்தார்.
மேலும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் போஸ்ட் செய்துள்ள ஒரு Quote கார்டில், “பெண்களை மட்டும் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளுக்கு உட்படுத்தி, ஆண்களிடம் ஒழுக்கம் சார்ந்த கேள்விகளை வைக்கவில்லையென்றால், இந்த சமூகமே ஒழுக்கக்கேடானது என்றுதான் புரிந்துகொள்ள வேண்டியதாக இருக்கிறது” என்னும் ஃபரிடாவின் வாசகத்தைப் பகிர்ந்திருந்தார்.
இதற்கு பதிலளித்த நடிகை வனிதா விஜயகுமார் “இங்கே சமூகம் என்று எதுவுமே இல்லை பேபி, உனது வாழ்க்கையை நன்றாக வாழ கற்றுக் கொள் , மக்கள் நாம் பதிவு செய்யும் புகைப்படங்களை மட்டும் தான் பார்ப்பார்கள், அவர்களை பற்றியெல்லாம் கவலைப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. நீ உன்னுடைய வாழ்க்கையை நோக்கி முன்னேறிக் கொண்டு போய்க் கொண்டே இரு, உனக்கு வலிமை இன்னும் கூடும்” என குறிப்பிட்டுள்ளார். வனிதா விஜயகுமார் தான் மூன்றாவதாக திருமணம் செய்துக்கொண்ட பீட்டர் பாலை அண்மையில் விவாகரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.