வனிதா விஜயகுமார் என்றால் வேறு ரகம், திருச்சி சாதனா என்றால் அது வேறு ரகம். இருவரும் சேர்ந்தால்?  அது தான் புது ரகம்! இருவரில் ஒருவர் தோன்றினால், அதிரும். இருவரும் தோன்றினால், அதகளம் தான். ஆம்... பப்ளிக் ஸ்டார் வனிதாவும், பர்சனல் ஸ்டார் திருச்சி சாதனாவும் இணைகிறார்கள். நேற்று முன்தினம் வனிதா விஜயகுமார் ‛கிலிமாஞ்சாரோ...’ கெட்டப்பில் ஒரு போஸ்ட் போட்டிருந்தார். பின்னர் அது படத்தின் குத்தாட்டத்திற்கான காஸ்ட்யூம் என தெரியவந்தது. 




ஆனால், அந்த குத்தாட்டத்தின் பின்னணியில் இன்னும் பல சுவாரஸ்யங்கள் குவிந்து கிடக்கின்றன. பல்லாவரம் சந்தை செட் போட்டு, கானா பாலா குரலில் குதூகலப்படுத்துகிறது அந்த குத்தாட்டம். வனிதா உடன் கனா பாலா மற்றும் கேபிஒய் ராமர் மற்றும் திருச்சி சாதனா ஆகியோர் உடன் ஆடுகின்றனர். ஆட்டம் என்றால், சாதாரண ஆட்டமில்லை. அதிரவைக்கும் ஆட்டமாம்.




வழக்கமாக இது போன்ற ஒத்திகை காட்சிகள் எல்லாம், தயாரிப்பு நிறுவனம் படம் வெளியான பின்பு தான் வெளியிடும். இங்கே... களத்தில் நிற்பது நம்ம சாதனாவாச்சே...! தரையில் நடப்பதெல்லாம், உடனே திரையில் வந்துவிடுமே. அவரது டான்ஸ் பயிற்சியை அப்படியே சூட் செய்து, தனது யூட்டியூப் பக்கத்தில் பதிவேற்றிவிட்டார் சாதனா. போதாக்குறைக்கு வனிதாவின் ரிஸ்க் ஸ்டெப்ஸ் மற்றும் கானா பாலாவின் கதறல் ஸ்டெப் என அனைத்தையும் ஒரு 5 நிமிடத்திற்கு பதிவு செய்து, ஊருக்கே போட்டு காட்டியுள்ளார் சாதனா. 




குத்து குத்து என்று ஒரே குத்தாட்டமாய் அந்த பகுதியே குலுங்குகிறது. அதிலும் தனது போஸனில், சாதனா வேறு ரகம் செய்கிறார். இனி பிரபல சினிமா ஸ்டாராக அவதாரம் எடுத்துள்ள சாதனாவிற்கு, கேரவேன் உள்ளிட்ட வசதிகள் செய்து தந்திருப்பதாக தெரிகிறது. போதாக்குறைக்கு பயிற்சியின் போது, அவருக்கு குடையேந்திய பெண் உதவியாளரும் தரப்பட்டுள்ளார். நீயா நானா போட்டியில் வனிதாவும்-சாதனாவும் போடும் இந்த குத்தாட்டம்... படத்திற்கு பெரிய பலமாக இருக்கும் என தயாரிப்பு நிறுவனம் கருதுகிறது. 


இதோ அந்த அரிய வகை வீடியோ...



 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர



 


ட்விட்டர் பக்கத்தில் தொடர





 





 


யூட்யூபில் வீடியோக்களை காண