திரைவாழ்வில் ஒரு ஹீரோயினாக "சந்திரலேகா" திரைப்படம் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். கலைக்குடும்பத்தின் வாரிசாக மிகுந்த எதிர்பார்ப்போடு நுழைந்த வனிதாவுக்கு ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. முதல் படத்தில் இளைய தளபதி விஜயுடன் டூயட் பாடிய வனிதா அதற்கு பிறகு நடிகர் ராஜ்கிரண் ஜோடியாக "மாணிக்கம்" எனும் படத்தில் நடித்திருந்தார். இப்படி விரல் விட்டு என்னும் அளவிலான படங்களில் மட்டுமே நடித்த வனிதா அதற்கு பிறகு பல குடும்ப சர்ச்சைகளில் சிக்கி காணாமல் போனார்.
பிக் பாஸ் கன்டென்ட் வண்டி:
காணாமல் போன வனிதாவை மீண்டும் திரை முன்னர் கொண்டு வந்து காட்டியது விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக பங்கேற்று பட்டி தொட்டி எல்லாம் பிரபலமானார். அவர் கலந்து கொண்ட பிக் பாஸ் சீசன் மிகவும் விறுவிறுப்பாக இருந்ததற்கு முக்கிய காரணமே வனிதா தான். உங்க வாய் சண்டைக்கு இல்லையா ஒரு எண்டு எனும் அளவிற்கு குழாய் அடி சண்டை பிக் பாஸ் வீட்டிற்குள் நடந்தது. ஒவ்வொரு வாரமும் எலிமினேஷன் லிஸ்டில் வனிதா இருந்தார் என்பதை காட்டிலும் அவர் வெளியேறும் வரை ஒவ்வொவரு நாளும் ப்ரோமோவில் நிச்சயம் வனிதா இருந்தார்.
சமையலிலும் கில்லாடி:
இப்படி கலக்கிய வனிதா விஜயகுமாருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்தது விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில். என்ன தான் சண்டைக்காரியாக கோவக்காரியாக இருந்தாலும் சமையலில் தூள் கிளம்புவார் வனிதா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசன் டைட்டில் வின்னர் வனிதா விஜயகுமார். அதனை தொடர்ந்து யூ டியூப் மூலம் மிகவும் பிரபலமானார்.
வனிதாவின் பிஸி ஷெட்யூல் :
இதன் மூலம் தற்போது வனிதா பக்கம் காற்று அடிக்க தொடங்கிவிட்டது. சில படங்களில் ஒப்பந்தம் ஆகி நடித்து வந்தார். நடிகர் பிரஷாந்த் நடிப்பில் வெளியாக தாமதமாகும் ஹிந்தி ரீ மேக் திரைப்படமான "அந்தகன்" படத்தில் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடித்திருக்கிறார். அதனை தொடர்ந்து தற்போது மீண்டும் "கொடூரன்" எனும் படத்தில் போலீஸ் அதிகாரியாக, லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் வனிதா விஜயகுமார். இவற்றை தவிரவும் 2ஜி அழகானது காதல், அனல்காற்று, பிக்கப் டிராப் உள்ளிட்ட படங்களிலும் தற்போது நடித்து வருகிறார்.
லேட்டஸ்ட் ஸ்டன்னிங் போஸ்ட்:
சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் வனிதா தற்போது ஒரு புதிய போட்டோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போஸ்ட் செய்துள்ளார். வனிதா போலீஸ் அதிகாரி உடையில் மிகவும் கம்பீரமாகவும் மிடுக்காகவும் காட்சியளிகிறார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் காட்டு தீ போல பரவி வைரலாகி வருகிறது. இதற்கு லைக்ஸ்களும் கமெண்ட்களையும் குவித்து வருகிறார்கள் ரசிகர்கள்.