பழம்பெரும் பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) சென்னையில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் நெற்றியில் காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.
வீட்டின் உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. மற்றொரு சாவி மூலம் உறவினர்கள் திறந்து பார்த்தபோது நெற்றியில் காயங்களுடன் இறந்து கிடந்தார்.
இந்தநிலையில், வாணி ஜெயராம் நினைவை போற்றும் வகையில் அவர் பாடிய டாப் 5 பாடல்களில் பட்டியலை காணலாம்.
முதல் பாடல் - ரே பப்பி ஹரா
கடந்த 1971 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான ‘குட்டி’ படத்தில் போலே ’ரே பப்பி ஹரா’ என்ற பாடலை பாடி சினிமா துறையில் பின்னணி பாடகியாக வாணி ஜெயராம் அறிமுகமானார். இந்த பாடலானது சினிமா ரசிகர்களால் அதிக கொண்டாடப்பட்ட நிலையில், அனைத்து இசையமைப்பாளர்களும் வாணி ஜெயராமனின் வீட்டின் கதவை தட்டத் தொடங்கினர்.
மல்லிகை என் மன்னன்:
கடந்த 1974 ம் ஆண்டு வெளியான தீர்க்கசுமங்கலி படத்தில், M.S.விஸ்வநாதன் இசையில் மல்லிகை என் மன்னன் மயங்கும் என்று வாணி ஜெயராம் பாடிய பாடல் இன்றுவரை யாராலும் மறக்க முடியாது.
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
மல்லிகை என் மன்னன் மயங்கும்பொன்னான மலரல்லவோஎந்நேரமும் உன்னாசைபோல்பெண்பாவை நான் பூச்சூடிக் கொள்ளவோமல்லிகை என் மன்னன் மயங்கும்பொன்னான மலரல்லவோ
மாசி மாச கடைசியிலே:
பாடல் : மாசி மாசாதிரைப்படம் : பல்லாண்டு வாழ்க 1975நட்சத்திர நடிகர்கள்: எம்.ஜி. ராமச்சந்திரன் மற்றும் லதாபாடியவர்: வாணி ஜெயராம்இசையமைத்தவர்: கே.வி.மகாதேவன்பாடல் வரிகள்: புலமை பித்தன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
மாசி மாசக் கடைசியிலேமச்சான் வந்தாருபங்குனி மாசம் பாக்கு வச்சுபங்குனி மாசம் பாக்கு வச்சுபரிசம் போட்டாரு
மாசி மாசக் கடைசியிலேமச்சான் வந்தாருபங்குனி மாசம் பாக்கு வச்சுபரிசம் போட்டாரு
ஆத்துப் பக்கம் தோப்பு பக்கம்சந்திக்க சொன்னாருஅடி அக்கம் பக்கம் மெதுவா பாத்துஎன்னையும் பாத்தாரு
ஏழு ஸ்வரங்களுக்குள்:
பாடல் : ஏழு ஸ்வரங்களுக்குள்திரைப்படம் : அபூர்வ ராகங்கள் 1975நட்சத்திர நடிகர்கள்: கமல்ஹாசன், மேஜர் சுந்தர்ராஜன், ஸ்ரீவித்யா, நாகேஷ், ரஜினிகாந்த் மற்றும் ஜெயசுதாபாடியவர்: வாணி ஜெயராம்இசையமைத்தவர்: எம்.எஸ்.விஸ்வநாதன்பாடல் வரிகள்: கண்ணதாசன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
ஏழு ஸ்வரங்களுக்குள்எத்தனை பாடல்ஏழு ஸ்வரங்களுக்குள்எத்தனை பாடல்இதயச் சுரங்கத்துள்எத்தனை கேள்வி
ஏழு ஸ்வரங்களுக்குள்எத்தனை பாடல்இதயச் சுரங்கத்துள்எத்தனை கேள்விகாணும் மனிதருக்குள்எத்தனை சலனம்
என்னுள் எங்கோ:
பாடல் : என்னுள் எங்கோதிரைப்படம் : ரோசாபூ ரவிகைகாரி 1979நட்சத்திர நடிகர்கள்: சிவகுமார் மற்றும் தீபாபாடியவர்: வாணி ஜெயராம்இசையமைத்தவர்: இளையராஜாபாடல் வரிகள்: கங்கை அமரன்
அந்த பாடலில் இருந்து இதோ சில பாடல் வரிகள்:
என்னுள்ளில் எங்கோஏங்கும் கீதம்ஏன் கேட்கிறது ஏன் வாட்டுதுஆனால் அதுவும் ஆனந்தம்
என்னுள்ளில் எங்கோஏங்கும் கீதம்ஏன் கேட்கிறது
என் மன கங்கையில் சங்கமிக்கசங்கமிக்க பங்கு வைக்கபொங்கிடும் பூம்புனலில்ஆஆ …ஆஆ.ஆஆஅஆஆபொங்கிடும் அன்பென்னும் பூம்புனலின்போதையிலே மனம்பொங்கி நிற்க தங்கி நிற்ககாலம் இன்றே சேராதோ