வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் ரிலீஸ் படமாக உலகளவில் வெளியான திரைப்படம் 'வாரிசு'. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது. 


ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரபு, ஷ்யாம், சங்கீதா, சம்யுக்தா என ஒரு பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள இப்படத்தில் நடிகை குஷ்பூவும் நடித்திருந்தார். ஆனால் படம் வெளியான பிறகு அவர் நடித்த காட்சிகள் ஒன்று கூட வெளிவரவில்லை. இது குறித்து பல கருத்துகள் சோசியல் மீடியாவில் பகிரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் படத்தின் இயக்குனர் வம்சி சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நேர்காணலில் நடிகை குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விளக்கமளித்துள்ளார்.


 



 


குஷ்பூ காட்சிகளை நீக்க காரணம் :


அவர் கூறுகையில் " நடிகை குஷ்பூவின் காட்சிகள் கிட்டத்தட்ட 17 நிமிடங்கள் இடம்பெறும். படத்தின் நீளம் கருதி அந்த காட்சிகள் நீக்கப்பட வேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும் அவர் நடித்த சீன்கள் டெலீட்டட் காட்சிகளில் நிச்சயமாக இடம்பெறும். குஷ்பூ மிகவும் சிறப்பாக நடித்திருந்தார்.  நடிகை குஷ்பூ விஜய்யின் சித்தியாக நடித்துள்ளார். சரத்குமார் செய்த சதி காரணமாக விஜய்யின் சித்தப்பாவும் குஷ்பூவும் பிரிந்துவிடுவார்கள். அதனால் விஜய் சித்தப்பா தற்கொலை செய்துகொள்கிறார். இருப்பினும் குஷ்பூ 20 ஆண்டுகளாக திருமணம் கூட செய்து கொள்ளாமல் விஜய் சித்தப்பாவின் நினைவுகளோடு வாழ்ந்து வருகிறார்.


 






 


விஜய் - குஷ்பூ சந்திக்கும் காட்சிகள், குஷ்பூவிற்காக விஜய் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக வந்தது. தவிர்க்க முடியாத காரணங்களால் மட்டுமே அவை நீக்கப்பட்டன. ஒரு படம் திரையிட இத்தனை நிமிடங்கள் தான் என உள்ளது. அதை நீடிக்க முடியாது என்பதால் இதை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  எனக்கும் பிரவீனுக்கும் பல வாக்குவாதங்கள் இதனால் ஏற்பட்டது. பல பேச்சுவார்த்தைகளுக்கு பிறகே நாங்கள் நடிகை குஷ்பூவின் காட்சிகளை நீக்க முடிவு செய்தோம். வாரிசு படம் குறித்து பல சர்ச்சைகள் ஏற்பட்டதில் இதும் ஒன்று. இவை அனைத்தும் நிச்சயமாக டெலீட்டட் காட்சிகளில் இடம் பெரும்” என்றார் இயக்குனர் வம்சி.  


 






 


என்ட்ரி சாங் குற்றச்சாட்டு :


விஜய் திரைப்படம் என்றாலே என்ட்ரி சாங் மாஸாக இருக்கும். ஆனால் வாரிசு படத்தில் அது கொஞ்சம் மிஸ்ஸிங் என தோன்றியதற்கு காரணம் அளவுக்கு அதிகமான கிராபிக் காட்சிகள் என்று பலரும் கேள்விகளை எழுப்பி வந்தனர். இது குறித்து இயக்குனர் வம்சி கூறுகையில் " அதற்கு காரணம் நான் தான். அது ட்ராவெலிங் சாங் போல அமைய வேண்டும் என்பதால் நேரமின்மையால் கிராபிக் காட்சிகள் மூலம் அதை ஈடுசெய்ய முடிவு செய்தோம். திரையரங்கங்களில் மக்கள் அந்த பாடலை ரசிக்கிறார்கள். ஒரு சில குற்றச்சாட்டுகள் இன்ட்ரோ சாங் குறித்து எழுந்தன. அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்காக என்னை மன்னியுங்கள். இருப்பினும் அந்த பாடல் கொடுக்க வேண்டிய பீல் முழுவதுமாக கிடைத்தது. அது தானே ஒரு பாடலுக்கு மிகவும் முக்கியமானது" என்றார் இயக்குனர் வம்சி.