இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதாவது, “ ஒரு சமூக பொறுப்புள்ள இயக்குநரிடம் இருந்தும், முன்மாதிரியாக இருக்கும் நடிகரிடம் இருந்தும் வந்திருக்கும் படம் தான் வலிமை. பிரம்மாண்டமான இந்தத்திரைப்படத்தில், முக்கியமான கருத்துகளை சொல்லும் வாய்ப்பை இயக்குநரும், நடிகர் பயன்படுத்தி  இருக்கின்றனர். இது போன்ற ஆக்‌ஷனை நான் பார்த்தது இல்லை.





உண்மையான சண்டைகாட்சிகள், நம்பகத்தன்மை, அசல்தன்மை மற்றும் எக்க்சக்கமான உழைப்பை கொட்டியுள்ள ஒவ்வொரு ப்ரேமும் படக்குழுவின் ஆர்வத்தையும், ரசிகர்கள் மீது வைத்துள்ள அன்பையும் காட்டுகிறது. அஜித் சார், ஹெச்.வினோத், போனிகபூர் சார், யுவன்ஷங்கர் ராஜா மற்றும் மொத்த படக்குழுக்கும் எனது பாராட்டுகள் என்று பதிவிட்டிருக்கிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் படத்தில், அம்மா, நாங்க வேற மாதிரி பாடல்களை எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 




ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த வலிமைத்திரைப்படம், கடந்த ஜனவரி மாதமே வெளியாக இருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து கொரோனா பரவல் குறைந்த நிலையில், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. படத்தின் பாடல்களுக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தாலும், பின்னணி இசையில்  ஜிப்ரானின் பங்கு இருப்பதாகவே சொல்லப்படுகிறது. நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்திற்கு, திலீப் சுப்பராயன் சண்டை இயக்குநராக பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.