Valimai Twitter Review: கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாளாகும். ஆமாம், ‘வலிமை’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான கொண்டாட்டங்களில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டனர்.
சில நாட்களாக, வலிமை படத்தின் புதிய ப்ரோமாவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் காத்திருப்பு முடிவுக்கு வந்த நிலையில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை முதலே வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் படத்தை கண்டுகளித்து வருகின்றனர். பலரும் ட்விட்டரில் படத்தின் ரிவியூ பதிவிட்டு வருகின்றனர். இந்தியாவின் சிறந்த ஆக்ஷன் த்ரில்லர் என்றும், செண்டிமெண்ட் காட்சிகளால் சில இடங்களில் ரசிக்க வைத்திருக்கும் இயக்குநர் இளைஞர்களுக்கான சூப்பர் மெசேஜை சொல்லி படத்தை முடித்திருப்பதாக பதிவிட்டுள்ளனர். அதேபோல படத்தின் நாயகியாக சொல்லப்பட்ட ஹீமா வெறும் நாயகியாக வந்து செல்லாமல் அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் தெறிக்கவிட்டிருப்பதாகவும், படத்தில் ரொமான்ஸ் போன்ற காட்சிகள் இல்லாமல் ஆரம்பம் முதலே விறுவிறுவென செல்வதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.