கடந்த இரண்டரை வருடங்களுக்கு மேலாக காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு இன்று முக்கியமான நாளாகும். ஆமாம், ‘வலிமை’ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான கொண்டாட்டங்களில் அஜித் ரசிகர்கள் ஈடுபட்டனர்.


சில நாட்களாக, வலிமை படத்தின் புதிய ப்ரோமாவை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இந்நிலையில் காத்திருப்பு முடிவுக்கு வந்த நிலையில் வலிமை திரைப்படம் இன்று வெளியானது. அதிகாலை முதலே வலிமை திரைப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். முக்கிய நகரங்களில் அதிகாலை காட்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு ரசிகர்கள் படத்தை கண்டுகளித்து வருகின்றனர். பலரும் ட்விட்டரில் படத்தின் முதல் பாதி குறித்து ரிவியூ பதிவிட்டு வருகின்றனர்.