ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் வலிமை. வலிமை... வலிமை.. அப்டேட்... அப்டேட் என தொடர்ந்து வலிமைக்கான எதிர்பார்ப்பு எகிறிக்கொன்டிருக்கும் நிலையில் கிட்டத்தட்ட ரிலீஸ் தேதியை நெருங்கிவிட்டது படம். இன்னும் 15 நாட்களுக்குள் வலிமை ரிலீஸ் என்பது கிட்டத்தட்ட உறுதிதான். இந்நிலையில்,படக்குழு ப்ரோமோஷன் வேலைகளில் பரபரப்பாக இயங்கி வருகிறது


வலிமைப்படத்தின் மேக்கிங் வீடியோ அண்மையில் படக்குழு சார்பில் வெளியிடப்பட்டது. அந்த வீடியோவில் பைக் ஸ்டண்ட் சம்ந்தமான காட்சிகள், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்துப்பட்டது, அஜித் பைக் ஸ்டண்ட் செய்யும் போது கீழே விழுந்து பின்னர் மீண்டும் எழுந்தது தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருந்தன. 


vignesh shivan |nayanthara | ‛இங்கே தானே தடை... நாங்க துபாய் போறோம்...’ புத்தாண்டுக்கு கெத்தாக பறந்த விக்கி-நயன்!




இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் ரசிகர்களிடம் இந்த வீடியோ ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லருக்காக ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்நிலையில் வலிமை படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளன. புத்தாண்டை வரவேற்கும் விதமாக வலிமை படக்குழு ட்ரெய்லர் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் வெளியீட்டுக்கே இன்னமும் 15 நாட்கள் கூட இல்லாத நிலையில் நாளை ட்ரெய்லர் வெளியாக வாய்ப்புள்ளதாகவே பலரும் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் #ValimaiTrailer என்ற ஹேஷ்டேக் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.














.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


 


சமீபத்திய பொழுதுபோக்கு செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் பொழுதுபோக்கு செய்திகளைத் (Tamil Entertainment News) தொடரவும்.