தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். லட்சக்கணக்கான ரசிகர்களால் ‘தல’ என அன்போடு கொண்டாடப்படும் அஜித்தின் முழுமையான தரிசணம் கிடைப்பது திரையில் மட்டும்தான்.அதனால்தானோ என்னவோ ரசிகர்கள் அஜித்தின் படங்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். பிங்க் படத்தின் ரீமேக்காக வெளிவந்த நேர்க்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு ஹச்.வினோத் நடிப்பில் மீண்டும் கூட்டணி அமைத்தார் அஜித். படத்திற்கு வலிமை என பெயரிடப்பட்டது. அந்த படம் தொடங்கி கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள்  ஆகிவிட்டது.இந்நிலையில் வலிமை படத்தின் வெளியீடு எப்போது என்று காத்திருந்த ரசிகர்களுக்கு போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியீட்டு தேதியை அறிவித்திருந்தார். அதன்படி படம் வருகிற பொங்கல் பண்டிகை அன்று ரசிகர்களுக்கு விருந்தாக அமையவிருக்கிறது.


முன்னதாக வெளியான ஃபஸ்ட் லுக் போஸ்டரை அவரது ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதன் பிறகு வலிமை படத்தின்  லிரிக்கள் வீடியோவும் வெளியாகி அதிக பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்தது. அதேபோல கிளிம்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தனர்.  அந்த வீடியோ டிரைலருக்கு ஒரு முன்னோட்டமாக அமைந்தது எனலாம்,  வெளியான ஐந்து நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களைக் கடந்தது. அந்த காட்சியில் பைக்கில் பறந்து வருகிறார் அஜீத் , அதேநேரம் ’கெட் ரெடி ஃபார் தி கேம்’ என்கிறார்  வில்லன் , ‘நான்  கேம் ஆரம்பிச்சாச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ என அதிரும் குரலில் அஜீத் வசனம் பேச அதிரவைப்பதாக இருந்தது அந்த முன்னோட்டம். படத்தில் அஜீத் கதாப்பாத்திரத்தின் பெயர் அர்ஜூன் என்பதும் குறிப்பிடத்தக்கது. வலிமை படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வாங்கியுள்ளார். படத்தில் அஜித்திற்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி  நடித்து வருகிறார்.  மேலும் யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர் .இந்நிலையில் விகடன் வலிமை படத்தின் சில பிரத்யேக போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்


பைக்குடன் கெத்து காட்டும் ‘வலிமை’ அஜித்






” கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் “ - கதாநாயகி பதட்டமாக இருக்க, கூலாக அவரை பார்த்து சிரிக்கிறார் அர்ஜூன் (கதாபாத்திரத்தின் பெயர் )






”நாங்க வேற மாறி “ - எடுக்கப்பட்ட காட்சிகளை சீரியஸாக நோட்டமிடும் அஜித், ஹச்.வினோத் மற்றும் நாயகி ஹுமா குரேஷி






ஹை டெல் கூலிங் கிளாசுடன் கெத்து காட்டும் அஜித்