Valimai release | வலிமை ரிலீஸ் பிப்ரவரி 24 தானா..!? ஒரே ட்வீட்டில் பரபரப்பை கிளப்பிய தியேட்டர்!

பிப்ரவரி 24ஆம் தேதிதான் வலிமை வெளியாகுமென படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கும் சூழலில் ராம் முத்துராம் தியேட்டர் நிர்வாகத்தின் இந்த ட்வீட் பேசுபொருளாகியுள்ளது.

Continues below advertisement

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. இந்தப் படத்தைத் தயாரித்து வெளியிட்டவர் நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர். 'பிங்க்' படத்தின் ரீமேக்கான இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து 'வலிமை' படத்திலும் அஜித் - வினோத் - போனிகபூர் கூட்டணி இணைந்தது. 

Continues below advertisement

யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துடன் ஹுமா குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் படப்பிடிப்பு ஆரம்பித்ததிலிருந்து எந்த அப்டேட்டும் வெளியாகாமல் இருந்ததால் அஜித் ரசிகர்கள் கிரிக்கெட் வீரர்களிடமெல்லாம் வலிமை அப்டேட் குறித்து கேட்டு வந்தனர்.  


இந்தச் சூழலில் வலிமை படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து சிங்கிள், க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர் என வரிசையாக வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும், படம் பொங்கலுக்கு வெளியாகும் என அதிகாரப்பூரவமாக அறிவிக்கப்பட்டது அஜித் ரசிகர்கள் வலிமையை கொண்டாட தயாராகினர்.

ஆனால், கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்ததால் வலிமை ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனால் அஜித் ரசிகர்கள் கவலையடைந்தனர். நிலைமை இப்படி இருக்க கொரோனா பரவல் தற்போது சற்று குறைந்திருப்பதன் காரணமாக ஊரடங்கை தமிழ்நாடு அரசு விலக்கிக்கொண்டுள்ளது.

 

இதனால் வலிமை எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு மீண்டும் அஜித் ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதற்கிடையே வலிமை படம் பிப்ரவரி 24ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகுமென நேற்றிலிருந்து ஒரு தகவல் பரபரப்பாக பேசப்பட்டுவருகிறது.

 

இந்நிலையில், திருநெல்வேலியில் இருக்கும் ராம்முத்துராம் சினிமாஸின் ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிடப்பட்டிருக்கிறது. அதில், “பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை  திரைப்படம் உங்கள் ராம் சினிமாஸில் வெளியாகும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

பிப்ரவரி 24ஆம் தேதிதான் வலிமை வெளியாகுமென படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருக்கும் சூழலில் ராம் முத்துராம் தியேட்டர் நிர்வாகத்தின் இந்த ட்வீட் பேசுபொருளாகியுள்ளது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

Continues below advertisement
Sponsored Links by Taboola