கடந்த பேட்டியில் வலிமை பட உருவாக்கத்தில் நடந்த பிரச்னைகள்,தன்னுடைய கதை உருவாக்கம், உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்த இயக்குநர் ஹெச்.வினோத், இதில் அஜித்துடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த சுவாரசியங்கள், ஏன் ஹூமா குரேசி, பைக் ஸ்டண்ட் காட்சிகளை உருவாக்குவதில் இருந்த சவால்கள் உள்ளிட்ட பல விஷயங்களை பகிர்ந்தார். 


கேள்வி: க்ரைம் ஜானரிலேயே படம் எடுக்குறீங்களே? 


பதில்: அதுதான் எனக்கு நல்லா வருது. அதுனாலத்தான் நான் அதுலேயே ட்ராவல் பண்றேன்.  


கேள்வி: சதுரங்க வேட்டையாகட்டும் அல்லது தீரன் அதிகாரம் ஒன்றாகட்டும் இந்த இரண்டு படங்களிலுமே ஸ்கிரிப் அவ்வளவு ஸ்ட்ராங்கா இருக்கும். இவ்வளவு ஸ்ட்ராங்கா ஸ்கிரிப்ட் பண்ற உங்களுக்கு கூட ஒரு ஸ்டார் தேவைப்படுகிறாரா? 


பதில்: அப்படியெல்லாம் இல்லை. சதுரங்க வேட்டை ரிலீஸ் ஆகும் போது, எனக்கு தெரிஞ்ச ஒருத்தர் இராமநாதபுரத்தில் உள்ள தியேட்டர் உரிமையாளரிடம் சொல்லி, அந்த படத்தை அங்கே போட்டார். அந்த தியேட்டர்ல ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 150 பேர் மட்டும்தான் அந்தப்படத்தை பார்த்தாங்க.




எங்க ஊரிலேயே அந்தப் படத்தை யாரும் பார்க்கல. நான் அஜித் சார் கூட கமிட் ஆனதுக்கப்புறமாத்தான் யார்ரா இவன் அப்படினு தேடி, தியேட்டர்ல பார்த்தத விட 3, 4 மடங்கு அதிகமா சதுரங்க வேட்டை படத்த மக்கள் பார்த்தாங்க..


சதுரங்க வேட்டை மாதிரி படங்கள நீங்க 100 சதவீதம் செய்ற வேலைய, அஜித் சார் மாதிரியான ஸ்டார வைச்சு பண்ற படங்கள 10 சதவீதம் மட்டும் பண்ணா போதும்.   


கேள்வி: போன இரண்டு படங்களிலும் உங்களுடைய வசனங்கள் பெரிசா பேசப்பட்டுச்சு.. இந்தப்படத்துல அஜித் சாருக்குன்னு ஏதாவது ஸ்பெஷலா பண்ணீருக்கீங்களா? 


பதில்: சில மாஸ் மொமண்ட்ஸ் ஃபேன்ஸூக்காக பண்ணிருக்கோம். மற்றபடி கதைக்கு என்ன தேவையோ அதைத்தான் பண்ணிருக்கோம். 


கேள்வி: வில்லன் ரோலுக்கு நிறைய சஜசன் போய் கடைசியா கார்த்திகேயாவ தேர்வு செஞ்சீங்க.. ஆனாலும் அவர் கிட்ட தெலுங்கு வாடை இருக்குனு ஃபீல் பண்ணிங்களாமே.. அப்புறம் எப்படி அத மாத்தினீங்க? 




பதில்: இல்ல... அவருடைய பிரசன்ஸ் மற்றும் ஆக்டிங்கால அதை அவரே மாத்திட்டாரு. 


கேள்வி: அஜித் சாரோட நீங்க இணைஞ்ச இரண்டு படங்களையுமே பாலிவுட்ல இருந்துதான் ஹீரோயின்ஸ கூட்டிட்டு வந்துருக்கிறீங்க.. ஏன் தமிழ்ல யாரும் செட் ஆகலையா? 


பதில்: அப்படி இல்ல.. தமிழ்ல இருக்குற ஹூரோயின்ஸ் ஆல்ரெடி சார் கூட 3,4 படம் பண்ணிட்டாங்க.. இன்னொன்னு ஃப்ரெஷ்  ஃபேஸா இருக்கணு. அவர் ஏஜூக்கும் செட் ஆகணும். இப்ப வரக்கூடிய ஹூரோயின்ஸ் சார விட ரொம்ப சின்ன வயசா இருக்காங்க..




இன்னொன்னு படத்த நம்ம பிற மொழிகளிலும் ரிலீஸ் பண்ணுவோம்..அதுக்கு ஏத்த மாதிரியும் இருக்கணும்.. இது எல்லாத்தையும் மைண்ட்ல வைச்சுதான் நம்ம செலக்ட் பண்ண முடியும். 


கேள்வி: படம் ஒரு ஆக்ஷன் படம் சொல்லிட்டீங்க.. பைக் சேஸிங் சீன்ஸ் நிறைய இருக்கு.. படப்பிடிப்பு சவாலா இருந்துருக்குமே? 


பதில்: நீங்க சாதாரணமா வண்டி ஓட்டுனா எப்படி வேணும்னாலும் ஓட்டலாம். ஆனா கேமாராவுக்குன்னு ஓட்டும் போது அதுல சில ரிஸ்க்ஸ் இருக்கு. கேமாராவுல கரெக்ட்டான லென்ந்த்ல ஃபோக்கஸ்ல வரணும். பைக் ஓட்டும் போது திடீர்னு ஃபாஸ்டா போக சொல்லுவாங்க.. ரைட்ல போக சொல்லுவாங்க.. லெஃப்ட் ல போக சொல்லுவாங்க.. ஃப்ரேமுக்கு  வெளியே போறீங்கணு சொல்லுவாங்க..




இதனால ரோட்ல கல்லு மண்ணு இருக்கா அப்படிங்கிறத நம்மால பார்க்க முடியாது.. இதக்கிடையில கேமாராவுக்குள்ள தெரியுற கொஞ்சம் ஃபேஸ் வைச்சு நீங்க நடிக்கவும் செய்யணும்.. இவ்வளவு சேலஞ்ஜையும் சகிச்சுக்கிட்டு நடிக்கிறதுக்கு ஆர்ட்டிஸ்ட் சப்போர்ட் வேணும்.


வழக்கமா இந்த மாதிரியான சீன்ல பைக்க நிக்க வைச்சுட்டு கேமாராவ மூவ் பண்ணி ஃபாஸ்ட்டா போற மாதிரி காட்டிருவாங்க.. ஹெல்மட்ட கழட்டி முடிய பறக்கவிட்டுட்டு  ஃபாஸ்ட்டா போற மாதிரி காட்டிருவாங்க.. நிக்க வைச்சே எல்லாத்தையும் பண்ணிருவாங்க..




ஆனால் வலிமையில ஸ்டண்ட் மாஸ்டர், கேமாராமேன் எல்லாரும் சேர்ந்து எல்லாத்தையும் ரியலாவே பண்ணிட்டாங்க.. வண்டி என்ன ஸ்பீடுல போகுமோ அதே ஸ்பீடுல போயி ஷீட் பண்ணிட்டாங்க.


பைக்குகள செலக்ட் பண்றதுல, அஜித் சாரோட இன்புட் நிறைய நான் எடுத்துக்கிட்டேன்.. ஏன்னா எனக்கு கியர் வண்டி ஓட்டத் தெரியாது.. சாதா ஸ்கூட்டர்தான் ஓட்டத் தெரியும். 


கேள்வி: தீரன் இருக்குற பஸ் சேஸிங் சீன் போல வலிமையிலையும் ஒரு பஸ் சேஸிங் சீன் இருக்குதோ? 




பதில்: அது வேற இது வேற.. இன்னொன்னு ராஜஸ்தான்ல மக்கள் போற பஸ் வெள்ளை கலர்லதான் இருக்கு.. இங்க போலீஸ் பஸ் வெள்ள கலர்லதான் இருக்கு. நான் ஏதோ வித்தியாசமா காட்டணும் அப்படிங்கிறதுக்காக கருப்பு பெயிண்ட் அடிக்க முடியாதுல்ல.. 


கேள்வி: அஜித்திடம் இருந்து நீங்க கத்துக்கிட்ட விஷயங்கள் என்னென்ன? 


பதில்: வலியை தாங்கும் சக்தி.. ஃபைட் எடுத்துக்கிட்டு இருப்போம். திடீர்னு அப்படியே குனிஞ்சி நின்னுட்டு இருப்பாரு.. என்ன அப்படினு கிட்ட போய் கேட்டா ஒண்ணுமில்ல சார் அப்படினு சொல்லிருவாரு.




அவரோட அசிஸ்டண்ட்டுக்கிட்ட போய் பார்த்தா அஜித் சாரோட முட்டி வீங்கி போயி இருக்கும். அதுல ஸ்பெரே அடிச்சிட்டு வருவாரு.. அப்ப நான் நாளைக்கு எடுத்துக்கலாம் அப்படினு சொன்னா நோ நோ.. னு சொல்லிருவாரு.. 


நம்ம ஏன் சார் இவ்வளவு கஷ்டப்படுறீங்க அப்படினு கேட்டா  “காசு வாங்குறோம்ல அப்படினு சிரிப்பாரு. அந்த வலியை தாங்கும் சக்தியை கத்துக்கணும்.


அப்புறம் மத்தவங்கள அவர் மதிக்கிற விதம். அதபார்த்து நான் மிரண்டு போயிருக்கேன்.. ஏன்னா அது ரொம்ப கஷ்டம். அதே போல வயசானவங்கள பார்த்த உடனே கால்ல விழுந்து பிளஸ்ஸிங் வாங்கிக்குவாரு.. அதே போல பெண்களை அவர் ட்ரீட் பண்ற விதத்தையும்  நம்ம அவர்கிட்ட இருந்து கத்துக்கணும்.” என்றார்.