காதலர் தின வாரத்தில் இன்று முத்த தினம் கொண்டாடப்படும் நிலையில் தமிழில் வெளியான முத்தம் தொடர்பான பாடல்களை காணலாம். 


1. 3 - கண்ணழகா


ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளியான படம் ‘3’. அனிருத் இசையமைத்த இப்படத்தில் ‘கண்ணழகா’ பாடல் இடம் பெற்றிருந்தது. இதில், இதழும் இதழும் இணையட்டுமே… புதியதாய் வழிகள் இல்லை…  இமைகள் மூடி அருகினில் வா…இதுபோல் எதுவும் இல்லை’ என்ற வரிகள் இடம் பெற்றிருக்கும்.


2. ரன் - இச்சுத்தா இச்சுத்தா


2001 ஆம் ஆண்டில் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன், மீரா ஜாஸ்மின் நடிச்ச படம் ‘ரன்’. வித்யாசாகர் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற டூயட் பாடல் ஒன்றின் முதல் வரியே ‘இச்சு தா இச்சு தா… கன்னத்துல இச்சு தா…பிச்சு தா பிச்சு தா…
கன்னங்களை பிச்சு தா’ என்று இருக்கும். 



3. தூள் - இத்தூனுண்டு முத்தம் 


2003 ஆம் ஆண்டு தரணி இயக்கத்தில் விக்ரம், ஜோதிகா, ரீமாசென் இயக்கத்தில் வெளியான படம் “தூள்”. வித்யாசாகர் இசையமைத்த இப்படத்தில் விக்ரம் -ரீமாசென் பாடலில் இத்துனுண்டு முத்தத்தில இஷ்டம் இருக்கா.. இல்ல
இங்கிலிஷு முத்தத்தில கஷ்டம் இருக்கா.. இன்ச் இன்ச்
முத்தம் வைக்க இஷ்டம் இருக்கா ..இல்ல பிரெஞ்சு
முத்தம் வைப்பதிலே கஷ்டம் இருக்கா..



4. வெடி - இச்சு இச்சு


2011 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கிய வெடி படத்தில் விஷால், சமீரா ரெட்டி ஆகியோர் நடித்திருந்தனர். விஜய் ஆண்டனி இசையமைத்த இப்படத்தில் “ இச்சு இச்சு இச்சு கொடு” என்ற வரிகளுடன் கூடிய பாடல் இடம் பெற்றிருந்தது. இப்பாடல் மிகப்பெரிய அளவில் பிரபலமாகியிருந்தது. 



5. திருடா திருடி - முத்தம் முத்தம் 


2003 ஆம் ஆண்டு சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் தனுஷ், சாயாசிங் நடிப்பில் வெளியான படம் ‘திருடா திருடி’. தினா இசையமைத்த இப்படத்தில் ஹீரோயினின் அறிமுக பாடலாக “முத்தம் முத்தம்” என்ற பாடல் முழுக்க முத்தத்தை மையப்படுத்தியே இருக்கும். 



6. 12 பி - முத்தம் முத்தம் முத்தமா


மறைந்த இயக்குநர் ஜீவா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளியான படம் ‘12பி’. இப்படத்தில் ஷாம், ஜோதிகா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த இப்படத்தில் “முத்தம் முத்தம் முத்தமா மூன்றாம் உலக யுத்தமா ஆசை கலையின் உச்சமா ஆயிரம் பாம்புகள் கொத்துமா” என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். 



7. பாஸ் என்கிற பாஸ்கரன்  - ஐலே ஐலே 


2010 ஆம் ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் ஆர்யா, நயன்தாரா நடிப்பில் வெளியான படம் “பாஸ் என்கிற பாஸ்கரன்”. யுவன் ஷங்கர் இசையமைத்த இப்படத்தில் ஐலே ஐலே என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். இதில் சரணத்தில் ஏவாள் முத்தம் தொடங்கி காதல் முத்தம் வரை வரிகள் இடம் பெற்றிருக்கும். 



8. பொம்மை - முதல் முத்தம் 


2023 ஆம் ஆண்டில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் ராதா மோகன் இயக்கிய படம் “பொம்மை”. இப்படத்தில் யுவன் ஷங்கர் இசையமைத்து பாடிய “முதல்  முத்தம்” பாடல் வரிகள் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. 



9. உல்லாசம் - முத்தே முத்தம்மா 


1997 ஆம் ஆண்டு ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் அஜித் - மகேஸ்வரி நடிப்பில் வெளியான படம் ‘உல்லாசம்’. இப்படத்துக்கு கார்த்திக் ராஜா இசையமைத்த நிலையில் இதில் கமல்ஹாசன், பவதாரிணி பாடிய “முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா?” என்ற பாடல் மிகவும் பிரபலமானது. 



10. அறிந்தும் அறியாமலும் - தீப்பிடிக்க முத்தம் 


2005 ஆம் ஆண்டு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் நவ்தீப், ஆர்யா உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் அறிந்தும் அறியாமலும். யுவன் இசையமைத்த இப்படத்தில் இடம் பெற்ற “தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா” பாடலை பிரேம்ஜி அமரன் பாடியிருந்தார். இது மிகப்பெரிய அளவில் பிரபலமானது. 



11. போக்கிரி - முத்தமிழ் 


2007 ஆம் ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் விஜய், அசின் நடிப்பில் வெளியான போக்கிரி படம் வெளியானது. இப்படத்தில் “நீ முத்தம் ஒன்று கொடுத்தால் முத்தமிழ்” என்ற பாடலை முத்தமும் தமிழும் கலந்த வரிகளோடு கொடுத்திருப்பார்கள்.