தமிழில் பிரம்மாண்ட படைப்புகளை வழங்கி வரும் லைகா புரடக்சன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில், இயக்குநர் சுராஜ் இயக்கத்தில், நீண்ட இடைவேளைக்கு பிறகு வைகைப்புயல் வடிவேலு நாயகனாக நடித்து வரும், “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. 

Continues below advertisement



                                                 


நீண்ட இடைவேளைக்கு பிறகு வடிவேலு நாயகனாக நடிக்கும் , “நாய் சேகர் ரிட்டன்ஸ்”  படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் சென்னை, மைசூர் முதலான பகுதிகளில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை பிரசாத் ஸ்டூடியோவில் மிக பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு, மும்பை நடன கலைஞர்கள் பங்கேற்க, கோலகலமாக ஒரு பாடல் படமாக்கப்பட்டு வருகிறது.


                                                   
                                                   


நடிகரும் நடன இயக்குநருமான பிரபுதேவா இப்பாடலுக்கு நடனம் அமைக்கிறார். வில்லு  படத்தை தொடர்ந்து, 14 வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு கூட்டணி இப்பாடலில் இணைந்து பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்த நிலையில், இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது தீவிரமாக  நடந்து வருகிறது. படத்தின் தயாரிப்பு பணிகள்  லைகா புரடக்சன்ஸ் தலைமை அதிகாரி GKM தமிழ்குமரன் தலைமையில் நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்லுக், இசை, டிரெயலர் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகுமென தயாரிப்புகுழு தெரிவித்துள்ளது. இயக்குநர் சுராஜ் எழுதி இயக்கும் இத்திரைப்படத்தை லைகா புரடக்சன்ஸ் சார்பில் சுபாஸ்கரன்  தயாரிக்கிறார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண