Vadivelu - Fahadh Faasil: மீண்டும் கூட்டணி சேரும் வடிவேலு - ஃபகத் பாசில்! உற்சாகத்தில் ரசிகர்கள்!

Vadivelu - Fahadh Faasil : மாமன்னன் படத்தை தொடர்ந்து ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது திரைப்படத்தில் கூட்டணி சேர்கிறார்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் மிகவும் பிரபலமான நிறுவனங்களில் ஒன்றான சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் ஏராளமான வெற்றிப்படங்களை கொடுத்து திரை ரசிகர்கள் மத்தியில் ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது. அந்த வகையில் இந்த முன்னணி நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 98வது படத்திற்கான அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்த சந்தோஷத்தை மேலும் அதிகரிக்கும் விதமாக மற்றொரு சர்ப்ரைஸ் தகவலையும் அறிவித்துள்ளது படக்குழு. 

Continues below advertisement

சூப்பர் குட் பிலிம்ஸ்

ஆர்.பி. சௌத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக இருக்கும் 98வது திரைப்படத்தை இயக்குகிறார் சுதீஷ் ஷங்கர். இவர் ஏற்கனவே "ஆறு மனமே" என்ற தமிழ் திரைப்படத்தையும் "வில்லாலி வீரன்" என மலையாள திரைப்படத்தையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

ஆங்கில புத்தாண்டை ஒட்டி வெளியான இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரையில் தலைப்பிட படாத  இப்படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கலைச்செல்வன் சிவாஜியும், படத்தொகுப்பினை ஸ்ரீஜித் சாரங்கும் கவனிக்க யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். 

ஃபகத் பாசில் - வடிவேலு:

மேலும் இப்படம் குறித்து சர்ப்ரைஸ் தகவலாக வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் வடிவேலுவும்  ஃபகத் பாசிலும் இணைந்து மிரட்டலாக நடித்திருந்த திரைப்படம் 'மாமன்னன்'. வைகை புயல் வடிவேலு வித்தியாசமான ஒரு நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். அரசியல் களத்தை மையமாக வைத்து ஒளிபரப்பான மாமன்னன் படத்திற்கு பிறகு மீண்டும் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் இணைய உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருந்து வரும் ஃபகத் பாசில் சமீப காலமாக தமிழ் சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். அவர் தமிழில்  நடித்த வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றன. அதை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்துடன் இணைந்து 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். 

சினிமாவில் இருந்து பிரேக் எடுத்து கொண்ட நடிகர் வடிவேலு 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படம் மூலம் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான மாமன்னன் படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. சந்திரமுகி 2 திரைப்படத்திலும் ஒரு குறிப்பிடத்தக்க கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

அந்த வகையில் ஃபகத் பாசிலுடன் இணைந்து வடிவேலு நடிக்க இருக்கும் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 98வது திரைப்படம் எந்த வகையான  கதைக்களத்தில் இருக்கும் என்ற யூகங்கள் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன.    

Continues below advertisement