தெலுங்கு  இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள திரைப்படம் ‘வாத்தி’.  கோலிவுட் சினிமாவில் தனுஷ் முதன்முறையாக பள்ளி ஆசிரியர் கதாபாத்திரத்தை ஏற்றுள்ள நிலையில், சென்ற வாரம் இப்படத்தில் ட்ரெய்லர் வெளியாகி கவனமீர்த்தது.


முன்னதாக தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம், நானே வருவேன் படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், வாத்தி படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிதும் அதிகரித்தது.


இந்நிலையில், (பிப்.17) வாத்தி படம் உலகம் முழுவதுமுள்ள திரையரங்குகளில் ரிலீசானது. தனியார்மயமாக்கப்பட்ட, வணிகமயமாக்கப்பட்ட கல்வி, கல்வியின் முக்கியத்துவம் ஆகியவற்றை பேசும் படமாக வாத்தி அமைந்த நிலையில், கலவையான விமர்சனங்களைப் படம் பெற்று வந்தது. 


இந்நிலையில், படம் வெளியாகி முதல் நாளில்  கோடி ரூபாய் வசூலும், இரண்டாம் நாளான நேற்று 11 கோடி ரூபாய் வசூலும் ஈட்டியுள்ளதாகவும், கடந்த இரண்டு நாள்களில் 24 முதல் 25 கோடி ரூபாய் வரை வாத்தி வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் வாத்தி வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.


தெலுங்கில் சார் எனும் பெயரில் வாத்தி படம் வெளியான நிலையில், ஹைதராபாத்தில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் விழா பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று முன்னதாக லைக்ஸ் அள்ளியது. 


இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய படத்தின் இயக்குநர் வெங்கி அட்லூரி "வாத்தி திரைப்படம் வெறும் இரண்டு மூன்று நாட்களில் திரையரங்குகளில் ஓடி செல்லும் ஒரு படம் கிடையாது. மக்கள் மிகவும் நம்பிக்கையுடன் இப்படத்தை பார்க்கலாம். தெலங்கானா மாவட்டத்தில் குறைந்தது 4 வாரங்கள் வெற்றிகரமாகவும் தமிழ்நாட்டில் 8 வாரங்களுக்கும் படம்  வெற்றிகரமாக ஓடும் என நம்பிக்கை தெரிவித்திருந்தார்.


மேலும் வாத்தி பட ப்ரமோஷனுக்காக பத்திரிகையாளர் ஒருவருக்கு வெங்கி அட்லுரி அளித்துள்ள பேட்டி பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.  “ நான் மட்டும் மத்திய கல்வி அமைச்சரானால் இட ஒதுக்கீட்டை நீக்கிவிடுவேன். இட ஒதுக்கீடு என்பது கண்டிப்பாக பொருளாதார அடிப்படையில்தான் இருக்க வேண்டும். சாதி அடிப்படையில் இருக்கக்கூடாது” என்று அவர் அந்த நேர்காணலில் பேசியிருந்தார்.


வெங்கி அட்லுரியின் இந்த பேட்டி கடந்த சில நாள்களாக சமூக வலைதளங்களில் பெரும் விவாத்தை ஏற்படுத்தியுள்ளது. ட்விட்டர்வாசிகள் பலரும் வெங்கி அட்லுரியின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். ews இட ஒதுக்கீடு ஏற்கெனவே கடும் எதிர்ப்பைப் பெற்று வரும் நிலையில், வெங்கி அட்லுரியின் இந்த கருத்து அவருக்கு அதிகளவு விமர்சனத்தையும், கண்டனத்தையும் குவித்து வருகிறது.


மேலும் படிக்க: Mayilsamy Death: கண்கலங்கிய உதயநிதி... கண்ணீர் விட்டு அழுத சித்தார்த்.... மயில்சாமி உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள், அரசியல் தலைவர்கள்!