நடிகை சம்யுக்தா சண்முகநாதன் மற்றும் முன்னாள் கிரிக்கேட் வீரர் அனிருத்தா ஶ்ரீகாந்தின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரும் முன்பே திருமணம் ஆகி விவாகரத்து பெற்று வாழ்ந்து வந்த நிலையில் தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொள்வது குறிப்பிடத் தக்கது.
சம்யுக்தா அனிருத்தா ஶ்ரீகாந்த் திருமணம்
பிரபல நடிகை சம்யுக்தா மற்றும் முன்னாள் கிரிக்கேட் வீரரான அனிருத்தா ஶ்ரீகாந்தின் திருமணம் இன்று குடுமப்த்தினர் மத்தியில் சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இருவரும் சில காலம் நண்பர்களாக பழகி வந்ததாகவும் இந்த நட்பு காதலாக மாறி தற்போது திருமணம்வரை சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.
சம்யுக்தா சண்முகநாதன்
கோயம்புத்தூரில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்த சம்யுக்தா தனியார் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இஞ்சினியராக பணியாற்றி வந்தவர். 2007 ஆம் ஆண்டு மாடலிங் தொடங்கிய இவர் மிஸ் சென்னை பட்டம் வென்று பிரபலமானார். மலையாளத்தில் 2018 ஆம் ஆண்டு வெளியான ஊலு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் . பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பரவலாக கவனமீர்த்தவர் மாடல் சம்யுக்தா. தொடர்ந்து விஜயின் வாரிசு படத்தில் ஷாமின் மனைவி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் தவிர்த்து தனுஷ் ராசி நேயர்களே , மை டியர் பூதம் , துக்ளக் தர்பார் ஆகியர் படங்களிலும் , சந்திரகுமார் என்கிற தொலைக்காட்சி தொடரிலும் நடித்துள்ளார்
முதல் திருமணம்
சம்யுக்தா ராயன் கார்த்தி என்கிற தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் . இவருக்கு ராயன் கார்த்தி என்கிற ஒரு மகன் உள்ளார். 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் சம்யுக்தா தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று தற்போது தனது மகனை வளர்த்து வருகிறார்.
யார் இந்த அனிருத்தா ஶ்ரீகாந்த்
முன்னாள் இந்திய கிரிக்கேட் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஶ்ரீகாந்தின் மகன் அனிருத்தா ஶ்ரீகாந்த் . இவர் ஐ.பி.எல் போட்டியில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்காக ஆடியுள்ளார். தற்போது கிரிக்கேட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். பிரபல மாடலான ஆர்த்தி வெங்கடேசனை அனிருத்தா ஶ்ரீகாந்த் திருமணம் செய்துகொண்டார். இரண்டு ஆண்டு திருமண வாழ்க்கைக்குப் பின் அவரை விவாரத்து பெற்றார்.
விவாகரத்து பெற்ற ஒரு ஆண்டிற்குள்ளாகவே சம்யுக்தா அனிருத்தா ஶ்ரீகாந்தை திருமணம் செய்துகொண்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது.