1970-1990 இந்த காலத்தில் அருமையான படங்கள், பாடல்கள் என்றும், அன்றும் இனிமையா இருந்து வருகிறது. இப்பொழுது உள்ள பெரியவர்கள் எதற்கெடுத்தாலும் எங்கள் காலத்தில் வந்த பாடல்கள் போலவா, இன்றைய கால பாடல்கள் உள்ளது. இன்றைய கால பாடல்களிலும், படங்களிலும் எங்கே கதை இருக்கிறது...? வரி இருக்கிறது என்று புலம்பிக்கொண்டு இருக்கிறார்கள். 


அதற்கு காரணமும் உண்டு. அன்றைய காலக்கட்டத்தில் நடித்த நடிகர், நடிகைகள் படங்களிலும் அத்தனை கதைகள் இருந்தது. கருத்துகள் இருந்தது. காமெடிகளில் கூட இரட்டை அர்த்தங்கள் இல்லாத வசனங்கள் இருந்தது. முதன்மையாக பாடல்களில் பாடல் வரிகள் இருந்தது. அதேபோல், கைதேர்ந்த நடிகர்கள், நடிகைகள் நடிப்பில் நடிப்பு பொங்கி வழிந்தது. 


அப்படி இருக்கையில் அந்த காலம் முதல் இந்த காலம் வரை நடித்த பலர் வான் உயரம் வரை ஜொலித்தாலும், ஒரு சிலர் எங்கே சென்றார்கள் என்று இதுவரை யாரும் அறியவில்லை. அப்படிப்பட்ட சிலரில் முக்கியமானவர்தான் இந்த வள்ளி திருமணம் நாடக நடிகை மாரிகண்ணு பாட்டி. ஒரு காலத்தில் புகழ்பெற்ற நாடக கலைஞராக இருந்த அவர், இவரது நடிப்புக்காக அன்றைய கால ஜனாதிபதியிடம் சிறந்த நடிகை என்று பெயர் பெற்றுள்ளார். 


அப்படி இருக்கையில், தற்போது இந்த மாரிகண்ணு பாட்டி இருக்க இடம் இல்லாமல், உடுத்த மாற்று துணியில்லாமல் கிடைத்த இடங்களில் கிடைத்த உணவை சாப்பிட்டு கொண்டு உயிர் வாழ்ந்து வருகிறார். ஒரு காலத்தில் இவர் சலங்கையை கட்டிக்கொண்டு வள்ளி ஆட்டம் ஆடினால், கூட்டம் அப்படி கூடுமாம். 


இவரின் இந்த நிலைமையை பார்த்து வலியவந்தவர்கள் எதாவது வாங்கி கொடுத்தாலும் வேண்டாமென்று மறுத்து விடுவாராம். தனக்கு பசித்தால் மட்டும் ஒரு கடையில் கிடைத்த உணவை கேட்டு வாங்கி சாப்பிடுவாரு. அதுவும் மூன்று வேளை கூட கிடையாது. அதிகபட்சமாக ஒன்று அல்லது இரண்டு முறைதான். உடுத்த மாற்று உடை கொடுத்தாலும் வேண்டாம், படுக்க  அல்லது போர்த்திக்கொள்ள போர்வை கொடுத்தாலும் வேண்டாம் என்று அடம் பிடிக்கிறார். 


இவர் அவ்வபோது சொல்லும் ஒருவார்த்தை, "நான் யார் கிட்டயும் சொத்து பத்து வாங்கி ஏமாத்தல, யார்கிட்டையும் திருடல" என்று பிரதிபலிக்கும். சொந்தம்பந்தம் என்று யாராவது இருக்கிறார்களா என்று கேள்வி கேட்டாலும் எனக்கு யாரையும் நம்பி போக விருப்பம் இல்லை. நான் இப்படியே இருந்துக்குறேன் என்று சிரித்த முகத்தோடு முகம் மலர்கிறார். 


எத்தனையோ நாடக கலைஞர் மற்றும் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரம் காப்பதற்கு சங்கம் இருந்தும், பலரது நிலைமை இன்னும் மோசமாகத்தான் இருக்கிறது. தொடர்ந்து, இதுபோன்ற கலைஞர்கள் "கூத்தாடி" என்றும் பட்டம் கொடுத்து ஓரங்கட்ட படுகிறார்கள். தற்போது, இவரை ஏதாவது ஒரு ஆசிரமத்தில் சேர்ப்பதற்கு ஒரு சிலர் முயற்சித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண