UUNCHAI: ‛எட்டு பாலிவுட் ஸ்டார்கள் எகிறி அடிக்கும்...’UUNCHAI’ நாளை வெளியாகிறது டிரெய்லர்!

எட்டு பாலிவுட் மூத்த நடிகர்கள் ஒன்றாக நடித்துள்ள "UUNCHAI " படத்தின் டிரெய்லர் நாளை வெளியாகிறது.

Continues below advertisement

இந்திய சினிமாவில்  முதன் முறையாக எட்டு பிரபலமான மூத்த பாலிவுட் நட்சத்திரங்கள் ஒன்றாக திரையில் நடித்திருக்கும் திரைப்படம் "UUNCHAI". பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் சூரஜ் ஆர். பர்ஜாத்யா இயக்கத்தில் மஹாவீர் ஜெயின் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் மஹாவீர் ஜெயின் மற்றும் பௌண்ட்லெஸ் மீடியா நிறுவனத்தின் சார்பில் நடாஷா மல்பானி ஓஸ்வால் இருவரும் ராஜஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்துடன்  முதல் முறையாக இணைந்து இந்த மிக பெரிய குழுவை தயாரித்துள்ளார்கள். 

Continues below advertisement

 

 

நாளை டிரைலர் ரிலீஸ் :

அமிதாப் பச்சன், அனுபம் கெர், போமன் இரானி, நீனா குப்தா, சரிகா மற்றும் பரினீதி சோப்ரா, டேனி டென்சோங்பா மற்றும் நஃபிசா அலி சோதி என எட்டு மூத்த நடிகர்கர் நடித்துள்ள இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் ஆர்வத்தை தூண்டியுள்ளது. இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த விவரம் தற்போது வெளியாகி ரசிகர்களை குஷி படுத்தியுள்ளது. ஆம் UUNCHAI படத்தின் டிரெய்லர்அக்டோபர் 18ம் தேதியான நாளை வெளியாகவுள்ளது. மேலும் இப்படம் நவம்பர் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது. 

 

ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 60வது தயாரிப்பு :
 
ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் 75 வது ஆண்டில் UUNCHAI திரைப்படத்தை வெளியிடுவது கூடுதல் சிறப்பு. இப்படம் அவர்களின் திரைவாழ்வில் 60வது தயாரிப்பாகும். ராஜ்ஸ்ரீ புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் முந்தைய சூப்பர் ஹிட் படங்களை போல ஒரு பெரிய நட்சத்திர குழுவுடன் உருவாக்கப்பட்டுள்ள UUNCHAI திரைப்படமும் நிச்சயமாக மிக பெரிய அளவில் பேசப்படும் என்பது உறுதி. 

 

 

லேட்டஸ்ட் ட்வீட் சொல்வது என்ன :

இப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களான ஆறு நண்பர்களும் ஒன்றாக இணைந்து இருக்கும் போஸ்டர் ஒன்றை  தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் அமிதாப் பச்சன். மேலும் இந்த ஸ்பெஷல் குழுவின் ஒரு அங்கமாக இருப்பதில் மிகவும் பெருமை என குறிப்பிட்டுள்ளார். மேலும் ஒரு நீண்ட இடைவேளைக்கு பிறகு உலகநாயகன் கமல்ஹாசனின் முன்னாள் மனைவி சரிகா இப்படத்தில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


இந்த அழகான நட்பின் கூட்டணியை நவம்பர் 11ம் தேதி அன்று அருகாமையில் உள்ள திரையரங்குகளில் சென்று காண தவறாதீர்கள். நாளை வெளியாகிறது "UUNCHAI" திரைப்படத்தின் டிரெய்லர்.

Continues below advertisement