லோகேஷ் கனகராஜின் திரைப்படங்களில் பழையப் பாடல்களுக்கு ஒர் தனித்துவமான இடம் உண்டு. இந்தப் பாடல்களை படத்தின் முக்கியமான காட்சிகளில் அந்த காட்சியில் மூடை வித்தியாசமாக மாற்றும் வகையில் பயண்படுத்தியிருப்பார் லோகேஷ். அவரது முந்தையப் படங்களில் இருந்தது போலவே லியோ படத்திலும் பழையப் பாடல்கள் இருக்குமா என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு லோகேஷ் கனகராஜின் பதில் என்ன தெரியுமா? அதற்குமுன் அவரது முந்தையப் படங்களில் பயன்படுத்தப் பட்ட பாடல்களைப் பார்க்கலாம்.


ஜும்பலக்கா ஜும்பலக்கா


 சிறையில் அடைத்து வைத்திருக்கும் கைதிகள் வெளியே இருக்கும் தங்களது ஆட்களுக்கு உள்ளே வருவதற்கான வழியை சொல்கிறார்கள். அவர்கள் பேசிவதை வெளியே கேட்காமல் செய்வதற்கு ஏதாவது செய்ய வேண்டும். அப்போது காவல் நிலையத்தில் இருக்கும்  ஹோம் தியேட்டரில் பாடலை சத்தமாக பாட்டுப்போடப் படுகிறது. 1999 ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் என் சுவாஸக் காற்றே என்கிறப் படத்தில் இடம்பெற்ற ஜும்பலக்கா ஜும்பலக்கா பாடல் போடப்படுகிறது. கொலைவெறியில் இருக்கும் வில்லன்களை மேலும் வெறியாவதைப் பார்த்து ரசிகர்களாகிய நமக்கு வெடித்துகொண்டு சிரிப்பு வருகிறது.


ஆசை அதிகம் வெச்சு


 அதே கைதி படத்தில் வில்லனான அர்ஜுன் தாஸ் பூட்டியிருந்த காவல் நிலையத்திற்குள் நுழைந்து செம டெரராக வந்து நிற்பார். அவரைப்பார்த்து பீதியில் நின்றுகொண்டிருக்கும் ஜார்ஜ் குட்டி. இந்த மாதிரியான ஒரு சூழலுக்கு லோகேஷ் கனகராஜ் ஒரு பாடலை பின்னணியில் சேர்க்கிறார். மறுபடியும் படத்தின் ஆசை அதிகம் வெச்சு என்கிறப் உல்லாசமான ஒரு பாடலை சேர்த்து அந்த காட்சியின் ஃப்ளேவரையே மாற்றிவிடுகிறார் லோகேஷ். முந்தையப் காட்சிக்கு ஏ.ஆர்.ரஹ்மான் என்றால் இந்தப் பாடலுக்கு இளையராஜாவை துணைக்கு அழைத்துக்கொள்கிறார்.


கருத்த மச்சான்


மாஸ்டர் திரைப்படத்தில் மாலவிகா மோகனனை கொலை செய்யத் துரத்திக்கொண்டு வருகிறது ஒரு கும்பல் அப்போது அவர் சலூன் கடை ஒன்றில் புகுந்து ஒளிந்துகொள்கிறார். அங்கு இருக்கும் டிவி யில் புது நெல்லு புது நாத்துப் படத்தில் இருக்கும் கருத்த மச்சான் படத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.


சக்கு சக்கு வத்திக்குச்சி


மிகப்பெரிய ஃபைட் சீன் ஒன்று நடைபெற இருக்கிறது. துப்பாக்கிகள் ஆயுதங்கள் என எல்லாம் தயாராக இருக்கிறது. இந்த சீனுக்கு மாஸான பிஜிஎம் போடட்டுமா என்று அனிருத் கேட்க லோகேஷுக்கு வேற ப்ளான்கள் இருந்தன. 1995 இல் வெளியான அசுரன் திரைப்படத்தில் லோகேஷுக்கு பிடித்த நடிகரான மன்சூர் அலிகான் ஆடியப் பாடலான சக்கு சக்கு வத்திக்குச்சி என்கிற பாடலை பேக் கிரவுண்டில் சேர்க்கிறார் லோகேஷ்.


லியோ


தற்போது லியோ படத்திலும் இதே மாதிரியான பாடல்கள் லியோ படத்திலும் இருக்குமா என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த லோகேஷ் கனகராஜ், அதில் என்ன சந்தேகம் 100% இருக்கும் என்று பதில் சொல்லியிருக்கிறார். இதனால் ரசிகர்கள் படு குஷியில் உள்ளனர்.