ஊர்வசி ரவுதெலா ( Urvashi Rautela )
கடந்த 2015 ஆம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் இந்தியா பட்டம் வென்றவர் ஊர்வசி ரவுடேலா. 15 வயது முதல் மாடலிங்கில் அசத்தி வரும் இவர் 2009 ஆம் ஆண்டு மிஸ் டீன் இந்தியா பட்டத்தையும் வென்றார். இதனிடையே மிஸ் இந்தியா டைட்டில் வென்ற பிறகு ஊர்வசி ரவுடேலாவுக்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. 2013 ஆம் ஆண்டு சிங் சாப் தி கிரேட் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அவர் அறிமுகமானார். தமிழில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான தி லெஜண்ட் படத்தில் நடித்திருந்தார்.
ஊர்வசி ரவுதெலா குளியலறையில் இருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் கசிந்துள்ளது. வெளியான கொஞ்ச நேரத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது. இந்த வீடியோ ஊர்வசிக்கு தெரியாமல் வெளியானதா இல்லை இது அவரது அடுத்த படத்திற்கான ப்ரோமோஷனா என்கிற கேள்வி எழுந்து வருகிறது.
அதே நேரம் இந்த வீடியோ உண்மையாக இருக்கும் பட்சத்தில் நடிகை ஊர்வசிக்கு சமூக வலைதளத்தில் தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகிறார்கள் ரசிகர்கள். சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனாவின் டீப் ஃபேக் வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபர்களை கண்டுபிடித்து காவல்துறை கைது செய்தது. தற்போது ஊர்வசியின் தனிப்பட்ட வீடியோவை வெளியிட்டவர்களை கண்டுபிடித்து தண்டனை வழங்க வேண்டும் என்று பிரபலங்களில் தனிப்பட்ட சுதந்திரம் பாதுகாக்க பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன