ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியான பிக் பாஸ் போட்டியில் பங்கேற்றது தொடங்கி பாலிவுட்டின் ஃபேஷன் சென்சேஷனாக தற்போது வலம் வருவது வரை உர்ஃபி ஜாவேத் தொடர்ந்து லைம்லைட்டில் இருந்து வருகிறார். நடிகை ராக்கி சாவந்துக்குப் பிறகு பாலிவுட்டில் உச்சபட்ச கவர்ச்சியால் கவனமீர்த்து வருபவராக உர்ஃபி ஜாவேத் உருவெடுத்துள்ளார்.


ஒரு பக்கம் இணையத்தில் ட்ரெண்ட் ஆகி உர்ஃபியும் அவரது ஆடைகளும் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில், மற்றொருபுறம் இணையவாசிகளின் கடும் எதிர்ப்புகளுக்கும், ட்ரோல்களுக்கும் ஆளாகி வருகிறார் உர்ஃபி.


ஆனால் தன்னைப் பற்றிய ட்ரோல்களுக்கு கொஞ்சமும்  தயங்காமல் உர்ஃபி ஜாவேத் இன்ஸ்டாவில் தொடர்ந்து பதிவிட்டும், பொது நிகழ்ச்சிகளுக்கு தான் வடிவமைத்த ஆடைகளுடன் வலம் வந்த படங்களைப் பதிவிட்டு லைக்ஸ் அள்ளியபடி உள்ளார்.


அந்த வகையில் ஸ்விம் சூட் மேலாடையும், டைனிங் டேபிள் ‘ஸீ த்ரூ’ விரிப்பில் ஸ்கர்ட்டும் அணிந்து வந்து இணையத்தில் கேலிக்கு உள்ளாகியுள்ளார் உர்ஃபி. மேலும் உர்ஃபி தொடர்ந்து மோசமான ஆபாசமான ஆடைக் கலாச்சாரத்தை ஊக்குவித்து வருகிறார் என்றும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.


 






முன்னதாக இதேபோல் டஸ்ட்பின் கவரில் உடை அணிந்து வந்து இணையத்தில் ட்ரோல்களை அள்ளினார் உர்ஃபி. சைக்கிள் செயின், கயிறு, மீன்வலை, கோணிப்பை, என தன் கையில் சிக்கும் எந்தப் பொருளிலும் ஆடைகள் தைத்து அணிந்து சமூக வலைதளங்களில் உர்ஃபி தொடர்ந்து ட்ரெண்ட் ஆகி வருகிறார். 


முன்னதாக மும்பையில் தனக்கு வீடு வாடகைக்கு கிடைப்பதில் உள்ள சிக்கல்கள் குறித்து உர்ஃபி வேதனையாகப் பதிவிட்டது இணையத்தில் பேசுபொருளானது. “நான் உடுத்தும் உடையால் முஸ்லிம்கள் எனக்கு வீடு வாடகைக்கு தர விரும்பவில்லை.


இன்னொருபுறம் நான் முஸ்லிம் என்பதால் இந்துக்கள் எனக்கு வீடு வாடகைக்கு விடுவதில்லை. மேலும் சில உரிமையாளர்களுக்கு எனக்கு வரும் அச்சுறுத்தல்கள் சிக்கல்களாக உள்ளன.


மும்பையில் வாடகைக்கு ஒரு வீட்டைத் தேடி கண்டுபிடிப்பது மிகக் கடினமானது” எனப் பதிவிட்டிருந்தார்.  அதேபோல் தன் உடை பற்றி விமர்சித்த பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத்துக்கு பதிலடி கொடுத்து உர்ஃபி இணையத்தில் முன்னதாக பேசுபொருளானார்.


இளைஞர்கள் உர்ஃபியின் வீடியோக்கள் பார்த்து கவனச்சிதறலுக்கு ஆளாவதாக உர்ஃபி தெரிவித்த நிலையில்,  பாலியல் வன்முறை கலாச்சாரத்தை சேத்தன் ஊக்குவிப்பதாகவும், பெண் சுதந்திரத்தை குறைத்து மதிப்பிடுவதாகவும்  உர்ஃபி கடுமையாக சாடியிருந்தார்.


மேலும் ’மீ டூ’ புகாரில் சேத்தன் பகத் சிக்கியது குறித்தும் உர்ஃபி கடுமையாக சாடிய நிலையில், பாலிவுட்டில் இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.