பிக்பாஸ் ஓடிடியின் முதல் சீசன் பங்குபெற்ற போட்டியாளர் உர்ஃபி ஜாவேத். இவர் நிறைய இந்தி சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவருக்கும் பிரபல பாலிவுட் நட்சத்திரமான ஃபரா கானுக்கும் அண்மையில் இன்ஸ்டாகிராமில் நடந்த மோதல்தான் தற்போது வைரலாகி வருகிறது.
ஃபராகான் சுசேன் கானின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் உர்ஃபி ஜாவேத் கிளப் ஒன்றில் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ வைரலானது.பொதுவில் பகிரப்பட்டிருந்த அந்த வீடியோவில் ஃபராகான் கமெண்ட் செய்திருந்தார். ‘ரசனையற்ற இந்த உடைக்காகவே அவரைக் கைது செய்யலாம்’ என ஃப்ராகான் அந்த போஸ்டில் பதிவிட்டிருந்தார்.இதற்கு விரிவான பதிலளித்த உர்ஃபி ‘மேம், ரசனையான உடையென்றால் உங்களைப் பொறுத்தவரை என்ன?. அதற்கு எனக்கு பதில் சொல்லுங்கள்.நான் உடை உடுத்தும் ரசனை பலருக்குப் பிடிக்காது எனத் தெரியும்.
நான் ஒன்றும் எதுவும் தெரியாதவள் அல்ல அதே சமயம் என்னைப் பற்றி வரும் கருத்துகளில் நான் கவனம் செலுத்துவதில்லை.பிராண்டட் உடை அணிந்தால்தான் ரசனையானதா?உங்களது உறவினர்கள் பலர் குட்டியான உடை அணிந்தெல்லாம் சினிமாவில் தோன்றுகிறார்கள்.அதுதான் ரசனையா? ஒரு பாடலுக்காக பெண்ணின் உடலை விற்பனைப் பொருட்களாக்குவது ஏற்றுக்கொள்ளத்தக்கதா?. மாற்றம் வீட்டில்தான் தொடங்க வேண்டும். தேவையற்று எதையும் பேசவேண்டாம். சமாதானம்!’ எனக் கூறியுள்ளார்.
அவரைப் பகடி செய்யும் விதமாக இன்ஸ்டா வீடியோ ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.