இந்த ஆண்டில் எஞ்சி இருக்கும் 6 மாதத்தில் எந்தெந்த படங்கள் எப்போது  வெளியாகும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா....?


கோலிவுட் முதல் பாலிவுட், ஹாலிவுட் என அதிரடி ஆக்‌ஷனிலும், காதல் காட்சிகளிலும், த்ரில்லர் கலந்த கதையாகவும் திரைக்கு வரும் படங்களும், அதன் ரிலீஸ் தேதிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


ஜூலை மாதம் ரிலீசாகும் படங்கள்:


ஜூலையில் மாவீரன், ப்ரோ(BRO), மிஷன் இம்பாசிபிள் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளது.


மாவீரன்: சிவகார்த்திகேயன் நடிப்பில் மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கும் படம் மாவீரன். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கிறார். நகைச்சுவையில் யோகிபாபு நடிக்க, வில்லனாக மிஷ்கின் மிரட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், இம்மாதம் 14ம் தேதி மாவீரனை திரையில் காண ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 


ப்ரோ(BRO): நீண்ட இடைவெளிக்கு பிறகு தெலுங்கில் ப்ரோ படத்தை சமுத்திரகனி ரீமேக் செய்துள்ளார். 2021ம் ஆண்டு ஓடிடியில் வெளியான ‘விநோதய சித்தம்’ என படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. சமுத்திரகனி இயக்கும் இந்த படத்தில் பவன் கலியாண், தம்பி ராமையா, சாய் தரம் தேஜ் நடித்துள்ளனர். டீசரை ஒரே நாளில் ஒன்றரை கோடிக்கும் மேலானோர் பார்த்ததால் படத்துக்கு மிகுந்த வரவேற்பு உள்ளது. இம்மாதம் 28ம் தேதி ப்ரோ திரையிடப்படம் வெளியாக உள்ளது. 


மிஷன் இம்பாசிபிள்: ஹாலிவுட்டில் ஆக்‌ஷன் படங்களின் பட்டியலில் எப்பொழுதும் இடம்பெற்றிருக்கும் படம் ’மிஷன்:இம்பாசிபிள்’. இந்த படத்தின் 7வது பாகம் இரண்டு பாகங்களாக இம்மாதம் 12ம் தேதி திரைக்கு வருகிறது. அண்மையில் படத்தின் மேக்கிங் வீடியோவை  வெளியிட்ட டாம் க்ரூஸ், ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். 


பார்பி: கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் பார்பி படம் வரும் 21ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் பார்பி பொம்மையையும், அதன் காதலையும் கதைகளமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 


ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் திரைப்படங்கள்:


ஆகஸ்டில் ஜெய்லர், போலா ஷங்கர், கிங் ஆஃப் கோதா உள்ளிட்ட படங்கள் வெளியாக உள்ளது.


ஜெய்லர்: நெல்சன் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் படம் ஜெய்லர். ரஜினியுடன் ரம்யாகிருஷ்ணன், தமன்னா, மோகன்லால், பிரியங்கா மோகன், ஷிவ ராஜ்குமார் நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் ஜெய்லர் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வருகிறது. திரையில் மிரட்ட போகும் ரஜினியை காண ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 


போலா ஷங்கர்: 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக் போலா ஷங்கர். மெகர் ரமேஷ் இயக்கும் இந்த படத்தில் அஜித் ரோலில் சிரஞ்சீவி நடிக்க அவருடன், தமன்னா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் இணைந்துள்ள. இந்த படம் ஆகஸ்ட் 11ம் தேதி திரையிடப்பட உள்ளது. 


கிங் ஆஃப் கோதா: துல்கர் சல்மான் நடித்திருக்கும் கிங் ஆஃப் கோதா ஆகஸ்ட் 28ம் தேதி ரிலீசாக உள்ளது. அபிலாஷ் ஜோஷி இயக்கி இருக்கும் இந்த படத்தில் துல்கர் சல்மானுடன் இணைந்து ஐஸ்வர்யா லக்ஷ்மி, பிரசன்னா, அனிகா சுரேந்தர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆக்ஷ்ன் காட்சிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட்டு இருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர இருக்கிறது. 


செப்டம்பர் மாதம் வெளியாகும் திரைப்படங்கள்


ஜவான்: அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்திருக்கும் படம் ஜவான். பிரமாண்டமாக உருவாகி இந்த படத்தில் தீபிகா படுகோனே, சஞ்சய் தத் நடித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பான் இந்தியா படமாக எடுக்கப்பட்டுள்ள ஜவான் இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் செப்டம்பர் 7ம் தேதி திரைக்கு வருகிறது.


சலார்: பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கி இருக்கும் படம் சலார். இதன் டீசர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை கவந்தது. மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டுள்ள சலார் படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் செப்டமர் 28ம் தேதி திரைக்கு வருகிறது.


சந்திரமுகி-2: பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும் படம் சந்திரமுகி2 . ரஜினியின் சந்திரமுகி படத்துக்கு பெரும் வரவேற்பு இருந்த நிலையில், இந்த படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சந்திரமுகி இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதில் ராகவா லாரன்ஸ் நடித்து இருக்க, அவருடன் வடிவேலு, கங்கனா ரனாவத், லட்சுமிமேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் விநாயகர் சதுர்த்தியான செப்டம்பர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. 


அக்டோபரில் வெளியாகும் படங்கள்


லியோ: ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் விஜய்யின் லியோ அக்டோபர் 19ம் தேதி திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்த படத்தில் த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், பிரியா ஆனந்த், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளர். ஆயுதப்பூஜையை ஒட்டி வெளியகும் லியோ படத்தை திரையிட, திரையங்கு உரிமையாளர் போட்டி போடுகின்றனர்.  


பகவந்த் கேசரி: தெலுங்கில் பாலகிருஷ்ணாவின் 108வது படமாக உருவாகி வரும் பகவந்த் கேசரி தசரா பண்டிகையை ஒட்டி அக்டோபர் மாதம் 20ம் தேதி ரிலீசாக உள்ளது. அனில் ரவிபுடி இயக்கி இருக்கும் இந்த படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். தெலுங்கானாவின் பின்னணியை கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தின் டீசர் அன்மையில் வெளியாகி வரவேற்பை பெற்றது.


நவம்பரில் வெளியாகும் படங்கள்


டைகர்-3: சல்மான் கான் கத்ரீனா கைஃப் நடித்திருக்கும் டைகர்-3 படம் நவம்பர் 10ம் தேதி ரிலீசாக உள்ளது. அதிரடி ஆக்‌ஷனில் ஏற்கெனவே வெளிவந்த 2 பாகங்களுக்கும் வரவேற்பு இருந்தால் 3ம் பாகத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.  மனீஷ் சர்மா இயக்கி இருக்கும் இந்த பாத்தில் சல்மான் கானுடன், இம்ரான் ஹாஷ்மி, நன்வீர், ஷாருகான், விஷால் ஜெத்வா நடித்துள்ளனர். டைகர்-3 இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீசாக உள்ளது.


ஜிகர்தண்டா-2: கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன் நடித்திருக்கும் படம் ஜிகர்தண்டா-2. படப்பிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. 


அயலான்: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி இருக்கும் அயலான் திரைப்படம்  தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஏலியனுக்கும், மனிதனுக்கும் இடையே இருக்கும் நட்பை கூறும் இந்த படத்தில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் பிரீத் சிங் நடித்துள்ளார். கிராபிஃப் காட்சிகளால் எடுக்கப்பட்டு இருக்கும் அயலான் தமிழ் தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருகிறது. படமானது, இந்தபடம் நவம்பர் 14ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


ஜப்பான்: ஜிப்சி படத்திற்கு பிறகு ராஜ்முருகன் இயக்கும் ஜப்பான் படத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஜப்பான் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது.


டிசம்பரில் வெளியாகும் படங்கள்


அனிமல்: ரன்பீர் கபூர் நடித்திருக்கும் இந்தி ரீமேக் படமான அனிமல் டிசம்பர் ஒன்றாம் தேதி திரைக்கு வருகிற்து. ரன்பீருக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்த நிலையில், இந்த படம் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகலில் திரையிடப்பட உள்ளது. 20217ம் ஆண்டு தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தின் ரீமேக்காக அனிமல் எடுக்கப்பட்டுள்ளது.


அக்வாமேன் 2: திகில் திரைப்படத்தை எடுப்பதில் பிரபலமான ஜேம்ஸ் வான் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைபப்டம் அக்வாமேன் - 2.. ஹாலிவுட்டின் சூப்பர் ஹீரோவான ஜேசன் மோமோவா நடிக்கும் இந்த படம் டிசம்பர் 14ம் தேதி இந்தியாவில் திரையிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி, தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் அக்வாமேன் வெளியாக உள்ளது.