மத்திய அமைச்சர் இயக்குநர் அட்லீயின் பணிவான சுபாவத்திற்காக அவரைப் பாராட்டியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.


அட்லீ


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ (Atlee), ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். தெறி, மெர்சல், பிகில் என அடுத்தடுத்து விஜய் படங்களை இயக்கி பாக்ஸ் ஆபிஸை வசூல் மழையால் நிரப்பினார். அடுத்தபடியாக பாலிவுட்டில் ஷாருக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கிய அட்லீ, இந்தியாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக மாறியுள்ளார். ஜவான் திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. பாலிவுட்டில் அட்லீயின் மார்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது. அடுத்தகட்டமாக ஹாலிவுட் என பல திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கிறார் அட்லீ.


குவியும் விருதுகளும் பாராட்டுக்களும்


ஜவான் படத்தின் வெற்றி அட்லீக்கு பல விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. சிறந்த இயக்குநருக்கான தாதா சாகேப் பால்கே விருது மற்றும் சிறந்த இயக்குநருக்கான ஜீ சினி விருதும் அவருக்கு சமீபத்தில் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தனியார் ஊடகமான என்.டி.டி.வி நடத்தும் இந்தியன் ஆஃப் தி இயர் விருது நிகழ்ச்சியில் 2023ஆம் ஆண்டுக்கான சிறந்த இயக்குநருக்கான விருது வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி இந்த விருதை அவருக்கு வழங்கினார்.


அட்லீயை பாராட்டிய மத்திய அமைச்சர்






இந்த விருதை வழங்கிய ஹர்தீப் சிங் பூரி, அட்லீயிடம் "இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கும் உங்களுடைய பணிவான குணத்திற்காகவும் நான் உங்களை இன்னும் ஒரு முறை பாராட்ட விரும்புகிறேன்" எனக் கூறியுள்ளார். தமிழ் இயக்குநர் ஒருவர் பாலிவுட், ஹாலிவுட், அரசியல் தலைவர்கள் என எல்லா துறைகளைச் சேர்ந்தவர்களிடையேயும் பாராட்டுக்களைப் பெறுவது ரசிகர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.


அல்லு அர்ஜூனை இயக்கும் அட்லீ 


டோலிவுட் ஸ்டார் அல்லு அர்ஜூனை வைத்து அட்லீ படம் இயக்க இருப்பதாக முன்னதாக தகவல்கள் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. 


சன் பிக்ச்சர்ஸ் மற்றும் கீதா ஆர்ட்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. அல்லு அர்ஜூன்  நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் த்ரிஷா நாயகியாக நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லீயின் ஜவான் படத்திற்கு இசையமைத்த அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க இருக்கிறார். வரும் ஏப்ரல் 8ஆம் தேடி நடிகர் அல்லு அர்ஜூன் தனது பிறந்த நாளைக் கொண்டாட இருக்கிறார் . அவரது பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் படம் குறித்தான அறிவுப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க :Indian 2 Release Date: 23 ஆண்டுகளுக்கு பிறகு வரும் இந்தியன் தாத்தா! கமல்ஹாசனின் இந்தியன் 2 ரிலீஸ் எப்போது?